PMT 8.6

சிற்றன்னை சொற்கொண்டவனே! தாலேலோ

724 சுற்றமெல்லாம்பின்தொடரத்தொல்கானமடைந்தவனே! *
அற்றவர்கட்கருமருந்தே! அயோத்திநகர்க்கதிபதியே! *
கற்றவர்கள்தாம்வாழும் கணபுரத்தென்கருமணியே! *
சிற்றவைதன்சொல்கொண்ட சீராமா! தாலேலோ.
724 cuṟṟam ĕllām piṉ tŏṭarat * tŏl kāṉam aṭaintavaṉe *
aṟṟavarkaṭku arumarunte * ayotti nakarkku atipatiye **
kaṟṟavarkal̤ tām vāzhum * kaṇapurattu ĕṉ karumaṇiye *
ciṟṟavai taṉ cŏl kŏṇṭa * cīrāmā tālelo (6)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Simple Translation

724. You, the dark jewel of Kannapuram where learned men live, the king of Ayodhya and the wonderful helper of the sages, left the desires of worldly life and went to the terrible forest, obeying the words of your step-mother, as all your relatives followed you. O auspicious Rāma, thālelo, thālelo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சுற்றம் எல்லாம் உறவினர் எல்லாரும்; பின் தொடர பின்னே தொடர்ந்துவர; தொல் கானம் புராதனமான வனத்தை; அடைந்தவனே! அடைந்தவனே!; அற்றவர்கட்கு பற்றற்றவர்களுக்கு; அருமருந்தே! அருமையான மருந்து போன்றவனே!; அயோத்தி நகர்க்கு அயோத்தியா நகரத்திற்கு; அதிபதியே! அரசனே!; கற்றவர்கள் தாம் வாழும் ஞானிகள் வாழும்; கணபுரத்து திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும்; என் கருமணியே! நீலரத்னம் போன்ற எம்பெருமானே!; சிற்றவைதன் சிறிய தாயார் கைகேயியின்; சொல் கொண்ட சொல்லை ஏற்றுக்கொண்ட; சீராமா! தாலேலோ! ஸ்ரீராமனே! தாலேலோ!