PMT 8.10

யாவரையும் படைத்தவனே! தாலேலோ

728 தேவரையுமசுரரையும் திசைகளையும்படைத்தவனே! *
யாவரும்வந்தடிவணங்க அரங்கநகர்த்துயின்றவனே! *
காவிரிநல்நதிபாயும் கணபுரத்தென்கருமணியே! *
ஏவரிவெஞ்சிலைவலவா! இராகவனே! தாலேலோ. (2)
728 ## tevaraiyum acuraraiyum * ticaikal̤aiyum paṭaittavaṉe *
yāvarum vantu aṭi vaṇaṅka * araṅka nakart tuyiṉṟavaṉe **
kāviri nal nati pāyum * kaṇapurattu ĕṉ karumaṇiye *
e vari vĕñcilai valavā * irākavaṉe tālelo (10)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Simple Translation

728. You who rest on Adisesha on the ocean in Srirangam where all come and worship your feet created the gods, the Asurans and all the directions. You are the dark jewel of Kannapuram where the fertile Kaveri river flows and you are the best of archers, shooting mighty arrows with your bow. O Raghava (Rāma), thālelo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தேவரையும் தேவர்களையும்; அசுரரையும் அசுரர்களையும்; திசைகளையும் திக்குகளையும்; படைத்தவனே! படைத்தவனே!; யாவரும் வந்து அனைவரும் வந்து; அடி வணங்க திருவடிகளை வணங்கிட; அரங்கநகர் ஸ்ரீரங்கத்திலே; துயின்றவனே! துயில்பவனே!; காவிரி காவேரியெனும்; நல் நதி பாயும் சிறந்த நதி பாயும்; கணபுரத்து திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும்; என் கருமணியே! நீலரத்னம் போன்ற எம்பெருமானே!; ஏ வரி எய்வதில் வல்லவனாய்; வெஞ்சிலை வலவா! வில்லை உடையவனே; இராகவனே! தாலேலோ! ஸ்ரீராமனே! தாலேலோ!