அவதாரிகை –
பார தந்த்ர்யத்துக்கு உறுப்பாகப் பெறில் கீழில் கழிந்த மனுஷ்ய ஜன்மமே யாகிலும் அமையும் என்கிறார் –
பின் இட்ட சடையானும் பிரமனும் இந்த்ரனும் துன்னிட்டு புகல் அரிய வைகுண்ட நீள் வாசல் மின் வட்ட சுடர் ஆழி வேம்கட கோன் தான் உமிழும் பொன் வட்டில் பிடித்து உடனே புக பெறுவேன் என ஆவேனே– 4-3-
பதவுரை
பின்னிட்ட சடையானும்–திரித்து விட்ட சடையை யுடையவனான சிவனும் பிரமனும்–சதுர்முகனும்