PMT 2.6

தொண்டர்களையே என் மனம் பக்தி செய்யும்

663 ஆதியந்தமனந்தமற்புதமான வானவர்தம்பிரான் *
பாதமாமலர்சூடும்பத்தியிலாத பாவிகளுய்ந்திட *
தீதில்நன்னெறிகாட்டி எங்கும்திரிந்தரங்கனெம்மானுக்கே *
காதல்செய்தொண்டர்க்கெப்பிறப்பிலும் காதல்செய்யுமென்னெஞ்சமே.
663 āti antam aṉantam aṟputam āṉa * vāṉavar tampirāṉ *
pāta mā malar cūṭum patti ilāta * pāvikal̤ uyntiṭa **
tītil naṉṉĕṟi kāṭṭi * ĕṅkum tirintu araṅkaṉ ĕmmāṉukke *
kātal cĕy tŏṇṭarkku ĕp piṟappilum * kātal cĕyyum ĕṉ nĕñcame (6)

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

663. Thirumāl is the lord without beginning or end, the wonderful one, the dear god of the gods. In all my births, my heart will worship and praise those devotees who love and serve Rangan and wander everywhere to show the faultless good path to redeem the sinners who do not have devotion and do not worship His divine feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வானவர் தம்பிரான் தேவர்கள் தலைவனும்; ஆதி துவக்கம்; அந்தம் முடிவு ஆகியவற்றின் காரணமானவனும்; அனந்தம் எங்கும் வியாபித்திருப்பவனும்; அற்புதம் ஆன வியப்புக்குரியவனுமானவனின்; பாத மா மலர் பாத மலர் என்னும் சிறந்த மலரை; சூடும் பத்தி இலாத சூட்டிகொள்ளும் பக்தியற்ற; பாவிகள் உய்ந்திட பாவிகளும் உய்யும்படி; தீதில் நன்னெறி குற்றமில்லாத நல்வழிகளை; காட்டி காட்டியபடி; எங்கும் திரிந்து எங்கும் திரிந்து கொண்டு; அரங்கன் அரங்கன்; எம்மானுக்கே என்னும் பிரானுக்கே; காதல் செய் பக்தி செய்யும்; தொண்டர்க்கு அடியார்களிடம்; என் நெஞ்சமே எனது மனமானது; எப்பிறப்பிலும் எல்லா பிறவிகளிலும்; காதல் செய்யும் பக்தி கொண்டிருக்கும்