PMT 2.1

கண் பெற்ற பயன்

658 தேட்டரும்திறல்தேனினைத் தென்னரங்கனை * திருமாதுவாழ்
வாட்டமில்வனமாலைமார்வனைவாழ்த்தி மால்கொள்சிந்தையராய் *
ஆட்டமேவியலந்தழைத்து அயர்வெய்தும்மெய்யடியார்கள்தம் *
ஈட்டம்கண்டிடக்கூடுமேல் அதுகாணும்கண்பயனாவதே (2)
658 ## teṭṭu arun tiṟal-teṉiṉait * tĕṉ araṅkaṉait * tirumātu vāzh
vāṭṭam il vaṉamālai mārvaṉai vāzhtti * māl kŏl̤ cintaiyarāy **
āṭṭam mevi alantu azhaittu * ayarvu- ĕytum mĕyyaṭiyārkal̤ tam *
īṭṭam kaṇṭiṭak kūṭumel * atu kāṇum kaṇ payaṉ āvate (1)

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

658. He is One hard to find, sweet like honey, adorned with garlands that never wither on His chest, where Goddess Lakshmi resides. If I am able to see true devotees who hail Him, chant His name, sing and dance in divine ecstasy and think of The Rangan who resides in Srirangam facing the South, my eyes will attain the purpose of having vision.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தேட்டு தேடிப்பெறுதற்கு; அரும் அருமையானவனும்; தேனினை தேன் போல் இனிமையானவனும்; திறல் வலிமையை கொடுப்பவனும்; தென் தென் திருவரங்கத்தில்; அரங்கனை வாழும் அரங்கனை; திருமாது பெரிய பிராட்டி வாசம்; வாழ் செய்தற்கிடமாக; வாட்டம் இல் வாடிப்போகாத; வனமாலை வன மாலையை அணிந்துள்ள; மார்வனை திருமார்பை உடையவனை; வாழ்த்தி வாழ்த்தி; மால் அவன் திறத்தில்; கொள் பிரேமை கொண்ட; சிந்தையராய் மனதையுடையவராய்; ஆட்டம் மேவி மகிழ்ந்து ஆடுவதில் ஈடுபட்டு; அலந்து பகவந் நாமங்களை; அழைத்து வாய்விட்டுச் சொல்லி; அயர்வு எய்தும் மெய் மறந்திருக்கும்; மெய்யடியார்கள் உண்மையான; தம் பக்தர்களின்; ஈட்டம் கண்டிட குழாங்களை தரிசித்திட; கூடுமேல் கூடுமானால்; அது காணும் கண் அது கண் படைத்ததற்கு; பயன் ஆவதே பயன் ஆகுமன்றோ