PMT 1.10

அரங்கன் அடியார்களுடன் அமரும் நாள் என்று?

656 வன்பெருவானகமுய்யஅமரருய்ய
மண்ணுய்யமண்ணுலகில்மனிசருய்ய *
துன்பமிகுதுயரகல அயர்வொன்றில்லாச்
சுகம்வளர அகமகிழுந்தொண்டர்வாழ *
அன்பொடுதென்திசைநோக்கிப்பள்ளிகொள்ளும்
அணியரங்கன்திருமுற்றத்து * அடியார்தங்கள்
இன்பமிகுபெருங்குழுவுகண்டு யானும்
இசைந்துடனேயென்றுகொலோவிருக்கு நாளே? (2)
656 ## வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
மண் உய்ய * மண்-உலகில் மனிசர் உய்ய *
துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லாச்
சுகம் வளர * அகம் மகிழும் தொண்டர் வாழ **
அன்பொடு தென்திசை நோக்கிப் பள்ளிகொள்ளும் *
அணி-அரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் *
இன்ப மிகு பெருங் குழுவு கண்டு * யானும்
இசைந்து உடனே என்றுகொலோ இருக்கும் நாளே (10)
656 ## vaṉ pĕru vāṉakam uyya amarar uyya
maṇ uyya * maṇ-ulakil maṉicar uyya *
tuṉpam miku tuyar akala ayarvu ŏṉṟu illāc
cukam val̤ara * akam makiḻum tŏṇṭar vāḻa **
aṉpŏṭu tĕṉticai nokkip pal̤l̤ikŏl̤l̤um *
aṇi-araṅkaṉ tirumuṟṟattu aṭiyār taṅkal̤ *
iṉpa miku pĕruṅ kuḻuvu kaṇṭu * yāṉum
icaintu uṭaṉe ĕṉṟukŏlo irukkum nāl̤e (10)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

656. For the betterment of the celestial world, for the well-being of the Gods, for the earth to flourish, for the survival of the people, for the sorrows to disappear and to augment good health and make His devotees live happily, Thirumāl rests in Srirangam facing the South and gives His grace. When will the day come when I join the group of happy devotees and partake the joy of worshipping Him? When will i see Him?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
வன் பிரளயத்தில் அழியாது இருக்கும்; பெரு பெருமைவாய்ந்த; வானகம் உய்ய வானுலகம் உய்ய; அமரர் உய்ய தேவர்கள் உய்ய; மண் உய்ய மண்ணுலகம் உய்ய; மண் உலகில் மண்ணுலகத்தில்; மனிசர் உய்ய மனிதர் உய்ய; துன்பம் மிகு மிக்க துக்கத்தை விளைவிக்கும்; துயர் அகல பாவங்கள் நீங்கவும்; அயர்வு ஒன்று இல்லா துக்கம் அற்ற; சுகம் வளர சுகம் வளரவும்; அகம் மகிழும் மனதில் மகிழ்ந்திடும்; தொண்டர் வாழ தொண்டர்கள் வாழவும்; அன்பொடு தென் திசை உகப்போடு தெற்கு திசை; நோக்கிப் பள்ளி கொள்ளும் நோக்கி கண்வளரும்; அணி அரங்கன் ஸ்ரீரங்கநாதன்; திருமுற்றத்து சன்னிதி முற்றத்திலே; அடியார் தங்கள் தொண்டர்களுடைய; இன்ப மிகு ஆனந்தம் பொங்கும்; பெரும் குழுவு பெரிய கூட்டத்தை; கண்டு யானும் வணங்கி நானும்; இசைந்து உடனே சேர்ந்து இருக்க; இருக்கும் அவர்களுடன்; நாளே! வாழும் காலம்; என்று கொலோ எப்போது வாய்க்குமோ