அவதாரிகை –
பர்யங்க வித்யையில் சொல்லுகிறபடியே இறே முமுஷூ மநோ ரதிப்பது — அத்தை இங்கே ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து கிடக்கிற இடத்திலே அனுபவிக்க மநோ ரதிக்கிறார் – சம்சாரி முக்தனாய்ச் சென்றால் -பாதே நாத்யா ரோஹதி -இத்யாதிப்படியே எழுந்து அருளி இருக்கிற பர்யங்கத்திலே மிதித்து ஏறினால் நீ ஆர் என்றால் -நான் ராஜ புத்ரன் என்னுமா போலே -அஹம் பிரஹ்மாஸ்மி -என்று இறே இவன் சொல்வது