PAT 5.4.7

உன் சேவடியை என்தலைமேல் பொறித்தாய்

469 பருப்பதத்துக்கயல்பொறித்த பாண்டியர்குலபதிபோல் *
திருப்பொலிந்தசேவடி என்சென்னியின்மேல்பொறித்தாய் *
மருப்பொசித்தாய்! மல்லடர்த்தாய்! என்றென்றுஉன்வாசகமே *
உருப்பொலிந்தநாவினேனை உனக்குஉரித்தாகினையே. (2)
469 paruppatattuk kayal pŏṟitta * pāṇṭiyar kulapati pol *
tirup pŏlinta cevaṭi * ĕṉ cĕṉṉiyiṉ mel pŏṟittāy **
maruppu ŏcittāy mal aṭarttāy * ĕṉṟu ĕṉṟu uṉ vācakame *
urup pŏlinta nāviṉeṉai * uṉakku urittu ākkiṉaiye (7)

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

469. Like the Pandya King(Malayadwajan) who imprinted the fish symbol on the mountains, you placed your bright, divine feet on my head. O lord who broke the tusks of the elephant Kuvalayāpeedam,. fought and defeated the wrestlers, I have always praised your several holy names with my tongue and you have made me Your own.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பருப்பதத்து மாமேரு மலையிலே; கயல் பொறித்த மீன் கொடியை நாட்டின; பாண்டியர் பாண்டிய வம்சத்து; குலபதி போல் அரசனைப்போல; திருப் பொலிந்த அழகு மிக்க; சேவடி செந்தாமரை போன்ற திருவடிகளை; என் சென்னியின் மேல் என் தலையின் மீது; பொறித்தாய் முத்திரையிட்டவனே!; மருப்பு குவலயாபீடத்தின் கொம்பை; ஒசித்தாய்! முறித்தவனே!; மல் மல்லர்களை; அடர்த்தாய்! அழித்தவனே!; என்று என்று என்று உன்; உன் வாசகமே நாமங்களையே கூறி; உருப் பொலிந்த தழும்பேரின; நாவினேனை நாக்கையுடைய என்னை; உனக்கு உனக்கு; உரித்து ஆக்கினையே உரியவனாக்கினாயே!
kulapati pol like the king; pāṇṭiyar of the Pandya dynasty; kayal pŏṟitta who hoisted the fish emblem flag; paruppatattu on the great Mount Meru; cevaṭi Your divine feet like red lotuses; tirup pŏlinta full of beauty; ĕṉ cĕṉṉiyiṉ mel placed them on my head; pŏṟittāy and left Your mark!; ŏcittāy! You broke; maruppu the tusk of Kuvalayapeedam; aṭarttāy! You destroyed; mal the wrestlers; ĕṉṟu ĕṉṟu saying your; uṉ vācakame Holy names alone; urup pŏlinta has scarred; nāviṉeṉai my tongue; urittu ākkiṉaiye You made me; uṉakku Yours