PAT 5.3.6

பிறவி நோய்க்கு மருந்தளிக்கும் மருத்துவன்

458 எருத்துக்கொடியுடையானும் பிரமனும்இந்திரனும் * மற்றும்
ஒருத்தரும்இப்பிறவியென்னும்நோய்க்கு மருந்தறிவாருமில்லை *
மருத்துவனாய்நின்றமாமணிவண்ணா! மறுபிறவிதவிரத்
திருத்தி * உங்கோயிற்கடைப்புகப்பெய் திருமாலிருஞ்சோலையெந்தாய்!
458 ĕruttuk kŏṭi uṭaiyāṉum * piramaṉum intiraṉum * maṟṟum
ŏruttarum ip piṟavi ĕṉṉum noykku * maruntu aṟivārum illai **
maruttuvaṉāy niṉṟa mā maṇivaṇṇā! * maṟu piṟavi tavirat
tirutti * uṉ koyil kaṭaip pukap pĕy * tiru māliruñ colai ĕntāy (6)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

458. Shivā who has the bull in his flag, Brahmā, Indra and no one else know the cure for the sickness which is birth. You, beautiful like a bright sapphire, are the healer who can cure this sickness. O my father, lord of Thirumālirunjolai, give me your grace so I may enter your abode and not be born again.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எருத்துக் கொடி ரிஷபக் கொடியையுடைய; உடையானும் ருத்திரனும் அவன் தந்தையான; பிரமனும் பிரம்மாவும்; இந்திரனும் தேவேந்திரனும்; மற்றும் ஒருத்தரும் மற்றும் ஒருத்தரும்; இப்பிறவி என்னும் இந்தப் பிறவி என்னும்; நோய்க்கு வியாதிக்கு; மருந்து மருந்து; அறிவாரும் இல்லை அறிந்தவர் இல்லை; மருத்துவனாய் மருந்தை அறிகின்றவனாய்; நின்ற இருக்கின்ற; மா மணி நீலமணி போன்ற; வண்ணா! வடிவையுடையவனே!; மறு பிறவி எனக்கு மறுபிறவி; தவிர நேராதபடி; திருத்தி திருத்தம் செய்து; உன் கோயில் உன் கோயில்; கடைப் புக வாசலில் இருந்து வாழும்படி; பெய் செய்தருளவேண்டும்; திருமாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலை; எந்தாய்! பிரானே!
uṭaiyāṉum Rudra (Shiva); ĕruttuk kŏṭi who bears the bull banner,; piramaṉum Brahma,; intiraṉum Indra,; maṟṟum ŏruttarum and no one else,; aṟivārum illai know; maruntu the cure; noykku for the disease called; ippiṟavi ĕṉṉum birth (samsara); vaṇṇā! the One in the form; mā maṇi of a blue gem; niṉṟa who stands as; maruttuvaṉāy the only cure; tirutti correct me; tavira to prevent me; maṟu piṟavi taking another birth; pĕy please bless me; kaṭaip puka to live at the entrance to; uṉ koyil Your temple; ĕntāy! oh Lord!; tirumāliruñcolai Thirumaliruncholai