PAT 5.2.4

நோய்காள்! என்னிடம் புகாதீர்கள்

446 மங்கியவல்வினைநோய்காள்! உமக்கும்ஓர்வல்வினைகண்டீர் *
இங்குப்புகேன்மின்புகேன்மின் எளிதன்றுகண்டீர்புகேன்மின் *
சிங்கப்பிரானவன்எம்மான் சேரும்திருக்கோயில்கண்டீர் *
பங்கப்படாதுஉய்யப்போமின் பண்டன்றுபட்டினம்காப்பே.
446 maṅkiya valviṉai noykāl̤! * umakkum or valviṉai kaṇṭīr *
iṅkup pukeṉmiṉ pukeṉmiṉ * ĕl̤itu aṉṟu kaṇṭīr pukeṉmiṉ **
ciṅkap pirāṉ avaṉ ĕmmāṉ * cerum tirukkoyil kaṇṭīr *
paṅkappaṭātu uyyap pomiṉ * paṇṭu aṉṟu paṭṭiṉam kāppe (4)

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

446. O diseases, you give pain to people because of their bad karmā, but there is also bad karmā for you. Do not enter my body, do not enter it. Do you see how it is not so easy to enter my body? Look, my body is now the divine temple where the lord who took the form of a man-lion (Narasimhā) stays. Go away or you will be in trouble. My body is not the same as it was.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மங்கிய உருத்தெரியாதபடி மங்கியிருக்கும்; வல்வினை வலிய பாபத்தால்; நோய்காள்! வந்த நோய்களே!; உமக்கும் ஓர் உங்களுக்கும் ஒரு; வல்வினை பாவ வினை உள்ளதை; கண்டீர் கண்டீர்களா?; இங்குப் புகேன்மின் இங்கு வராதீர்கள்; புகேன்மின் வராதீர்கள்; கண்டீர் என்னை நெருங்குவது; எளிது அன்று எளிதன்று; புகேன்மின் வராதீர்கள்; சிங்கப் பிரான் நரசிம்மாவதாரமெடுத்தவன்; அவன் எம்மான் அவனே என் எம்பெருமான்; சேரும் அவன் இருக்கும் இடம்; கண்டீர் பாருங்கள்; பங்கப் படாது துன்பப்படாமல்; உய்யப் போமின் பிழைத்துப்போங்கள்; பண்டு அன்று என் ஆத்மாவும் சரீரமும் முன்புபோல் அன்று; பட்டினம் காப்பே கடவுளால் காப்பாற்றப்பட்டுள்ளது
maṅkiya dimmed to the point of being unrecognizable; valviṉai by the weight of sin; noykāl̤! o diseases that have come!; umakkum or you too have a; valviṉai karmic sin of your own—; kaṇṭīr did you realize that?; iṅkup pukeṉmiṉ do not come here; pukeṉmiṉ do not come; kaṇṭīr approaching me; ĕl̤itu aṉṟu is not easy; pukeṉmiṉ do not come; ciṅkap pirāṉ the one who took the Narasimha avatar; avaṉ ĕmmāṉ He is my Lord; kaṇṭīr look at; cerum the place where He resides; paṅkap paṭātu without suffering; uyyap pomiṉ go away safely; paṇṭu aṉṟu my soul and body are no longer as they once were; paṭṭiṉam kāppe they have been protected by the Lord