PAT 5.2.1

அரவணையாதியான் காப்பாற் பிணிபோக்கல் நோய்களே! ஓடி விடுங்கள்

443 நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்புகள்போல்நிரந்து * எங்கும்
கைக்கொண்டுநிற்கின்றநோய்காள்! காலம்பெறஉய்யப்போமின் *
மெய்க்கொண்டுவந்துபுகுந்து வேதப்பிரானார்கிடந்தார் *
பைக்கொண்டபாம்பணையோடும் பண்டன்றுபட்டினம்காப்பே. (2)
443 ## nĕyk kuṭattaip paṟṟi * eṟum ĕṟumpukal̤ pol nirantu * ĕṅkum
kaik kŏṇṭu niṟkiṉṟa noykāl̤! * kālam pĕṟa uyyap pomiṉ **
mĕyk kŏṇṭu vantu pukuntu * vetap pirāṉār kiṭantār *
paik kŏṇṭa pāmpu- aṇaiyoṭum * paṇṭu aṉṟu paṭṭiṉam kāppe (1)

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

443. O diseases that stay and spread on our bodies like the ants that swarm around the ghee pot and climb on it! Go away and we want to become well. The god of the Vedās, lying on the snake bed has entered into my body and stays there. It is not my old body. God is there now and he protects it.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெய் நெய் வைத்திருக்கும்; குடத்தை குடத்தை; பற்றி ஏறும் பற்றிக்கொண்டு ஏறுகின்ற; எறும்புகள் போல் எறும்புகள் போல்; நிரந்து எங்கும் எங்கும் பரந்து; கைக் கொண்டு என்னை வசப்படுத்தி; நிற்கின்ற நிலைத்து நிற்கிற; நோய்காள்! வியாதிகளே!; காலம் பெற விரைவாக; உய்ய உங்கள் பிழைப்பைத்தேடி; போமின் போய் விடுங்கள்; வேத பிரமனுக்கு; பிரானார் வேதத்தை உபகரித்தருளின; எம்பெருமான் எம்பெருமான்; பைக் கொண்ட பரந்த படங்களையுடைய; பாம்பு பாம்புப்; அணையோடும் படுக்கையோடுங்கூட; மெய் என் சரீரத்தை; கொண்டு போக்யமாகக் கொண்டு; வந்து புகுந்து வந்து புகுந்து; கிடந்தார் கிடந்தார் ஆதலால்; பண்டு அன்று என் ஆத்மாவும் சரீரமும் முன்புபோல் அன்று; பட்டினம் காப்பே கடவுளால் காப்பாற்றப்பட்டுள்ளது (ஆகவே நீங்கள் புக இனி இங்கு இடமில்லை)
ĕṟumpukal̤ pol like ants; paṟṟi eṟum that climb and hold on; kuṭattai to the pot; nĕy in which the ghee is kept; noykāl̤! o diseases!; niṟkiṉṟa that remain firm; nirantu ĕṅkum which spread everywhere; kaik kŏṇṭu and ensnare me; kālam pĕṟa quickly; pomiṉ leave and; uyya go in search of your survival; ĕmpĕrumāṉ my Lord; pirāṉār who gave the vedas; veta to Brahma; aṇaiyoṭum along with his bed of; pāmpu the serpent; paik kŏṇṭa with expanded hoods; vantu pukuntu He has come and entered; mĕy my body; kŏṇṭu taken it as His sacred offering; kiṭantār and now lies there—therefore; paṇṭu aṉṟu my soul and body are no longer as they once were; paṭṭiṉam kāppe and they have been protected by God (so, there is no place for you to enter anymore)