PAT 4.8.6

அசுரர்களை ஆழியால் அழித்தவனூர் திருவரங்கம்

407 கீழுலகில்அசுரர்களைக் கிழங்கிருந்துகிளராமே *
ஆழிவிடுத்துஅவருடைய கருவழித்தவழிப்பனூர் *
தாழைமடலூடுரிஞ்சித் தவளவண்ணப்பொடியணிந்து *
யாழினிசைவண்டினங்கள் ஆளம்வைக்கும்அரங்கமே.
407 kīzh ulakil acurarkal̤aik * kizhaṅkiruntu kil̤arāme *
āzhi viṭuttu avaruṭaiya * karu azhitta azhippaṉ ūr **
tāzhai- maṭal ūṭu uriñcit * taval̤a vaṇṇap pŏṭi aṇintu *
yāzhiṉ icai vaṇṭiṉaṅkal̤ * āl̤am vaikkum araṅkame (6)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

407. Srirangam is the divine abode of the Lord who went to the underworld and destroyed the asuras and uprooted their clan with His discus(chakra) This is the place where bees buzz like lutes and drink honey from the petals of screw pine flowers and are covered with the coral-like pollen.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
யாழின் இசை வீணை இசையை போன்ற இசையை; வண்டினங்கள் வண்டுகளின் கூட்டம்; தாழைமடல் தாழம்பூவின் மடல்மீது; ஊடு உரிஞ்சி உடம்பை தேய்த்துக்கொண்டு; தவள வண்ணப்பொடி வெளுத்த நிறப் பொடியை; அணிந்து உடம்பில் பூசிக்கொண்டு; ஆளம் வைக்கும் ரீங்காரம் செய்யும் இடம்; அரங்கமே திருவரங்கமே; கீழ் உலகில் பாதாள லோகத்திலுள்ள; அசுரர்களை அசுரர்கள்; கிழங்கிருந்து அடிக்கிடந்து; கிளராமே கிளம்பவொட்டாதபடி; ஆழி விடுத்து சக்கராயுதத்தை ஏவி; அவருடைய கரு அவ்வசுரர்களுடைய கரு; அழித்த அழிந்திட; அழிப்பன் ஊர் அழித்த பிரானின் ஊர்
araṅkame it is Sri Rangam; vaṇṭiṉaṅkal̤ where swarm of bees; ūṭu uriñci rub their bodied; tāḻaimaṭal on the bud of the screwpine flower; āl̤am vaikkum makes the humming sound; yāḻiṉ icai like the sound of the veena; aṇintu and apply to their bodies; taval̤a vaṇṇappŏṭi bright-colored powder; aḻippaṉ ūr it is the residing place of the Lord; āḻi viṭuttu who used His divine discus; kiḻaṅkiruntu and rooted; acurarkal̤ai Asuras; kil̤arāme out; kīḻ ulakil of the underworlds; aḻitta and destroyed; avaruṭaiya karu their entire clan