Chapter 7

Praising Prayāg Rāj - (தங்கையை மூக்கும்)

கண்டம் என்னும் திருப்பதி
Praising Prayāg Rāj - (தங்கையை மூக்கும்)
Among the sacred places in the northern land is the fragrant city called Kandan, located on the banks of the Ganga. Here, the Lord is known as Purushottaman. This hymn praises the glories of this town. The Divya Desam where the Lord resides offers greater blessings to the devotees than the Lord himself. The Lord, who resides in holy places such as Mathura, Saligrama, Srivaikuntam, Dwaraka, and Ayodhya, resides in this town. The āzhvār says, "Worship Him and attain salvation."
வட நாட்டிலுள்ள திருப்பதிகளுள் கண்டமென்னும் கடி நகர் ஒன்று. இது கங்கைக் கரையிலுள்ளது. இங்கு புருஷோத்தமன் என்ற பெயரோடு பகவான் எழுந்தருளி இருக்கிறான். அவ்வூரின் பெருமைகளை இத்திருமொழி கூறுகிறது. பகவானைக் காட்டிலும் அவன் வாழும் திவ்யதேசமே அடியார்களுக்குப் பெரும்பேறு அளிக்கவல்லது. வட மதுரை, + Read more
Verses: 391 to 401
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will reach the ankled lotus feet of dark ocean hued Lord Krishna
  • PAT 4.7.1
    391 ## தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த * எம் தாசரதி போய் *
    எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட * எம் புருடோத்தமன் இருக்கை **
    கங்கை கங்கை என்ற வாசகத்தாலே * கடு வினை களைந்திடுகிற்கும் *
    கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற * கண்டம் என்னும் கடிநகரே (1)
  • PAT 4.7.2
    392 சலம் பொதி உடம்பின் தழல் உமிழ் பேழ்வாய்ச் * சந்திரன் வெங்கதிர் அஞ்ச *
    மலர்ந்து எழுந்து அணவும் மணிவண்ண உருவின் * மால் புருடோத்தமன் வாழ்வு **
    நலம் திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும் * நாரணன் பாதத் துழாயும் *
    கலந்து இழி புனலால் புகர் படு கங்கைக் * கண்டம் என்னும் கடிநகரே (2)
  • PAT 4.7.3
    393 அதிர் முகம் உடைய வலம்புரி குமிழ்த்தி * அழல் உமிழ் ஆழிகொண்டு எறிந்து * அங்கு
    எதிர் முக அசுரர் தலைகளை இடறும் * எம் புருடோத்தமன் இருக்கை **
    சதுமுகன் கையில் சதுப்புயன் தாளில் * சங்கரன் சடையினில் தங்கி *
    கதிர் முகம் மணிகொண்டு இழி புனல் கங்கைக் * கண்டம் என்னும் கடிநகரே (3)
  • PAT 4.7.4
    394 இமையவர் இறுமாந்து இருந்து அரசாள * ஏற்று வந்து எதிர் பொரு சேனை *
    நமபுரம் நணுக நாந்தகம் விசிறும் * நம் புருடோத்தமன் நகர்தான் **
    இமவந்தம் தொடங்கி இருங்கடல் அளவும் * இரு கரை உலகு இரைத்து ஆட *
    கமை உடைப் பெருமைக் கங்கையின் கரைமேல் * கண்டம் என்னும் கடிநகரே (4)
  • PAT 4.7.5
    395 உழுவது ஓர் படையும் உலக்கையும் வில்லும் * ஒண் சுடர் ஆழியும் சங்கும் *
    மழுவொடு வாளும் படைக்கலம் உடைய * மால் புருடோத்தமன் வாழ்வு **
    எழுமையும் கூடி ஈண்டிய பாவம் * இறைப் பொழுது அளவினில் எல்லாம் *
    கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல் * கண்டம் என்னும் கடிநகரே (5)
  • PAT 4.7.6
    396 தலைபெய்து குமுறிச் சலம் பொதி மேகம் * சலசல பொழிந்திடக் கண்டு *
    மலைப் பெரும் குடையால் மறைத்தவன் மதுரை * மால் புருடோத்தமன் வாழ்வு **
    அலைப்பு உடைத் திரைவாய் அருந்தவ முனிவர் * அவபிரதம் குடைந்து ஆட *
    கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல் * கண்டம் என்னும் கடிநகரே (6)
  • PAT 4.7.7
    397 வில் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி * மேல் இருந்தவன் தலை சாடி *
    மல் பொருது எழப் பாய்ந்து அரையனை உதைத்த * மால் புருடோத்தமன் வாழ்வு **
    அற்புதம் உடைய ஐராவத மதமும் * அவர் இளம்படியர் ஒண் சாந்தும் *
    கற்பக மலரும் கலந்து இழி கங்கைக் * கண்டம் என்னும் கடிநகரே (7)
  • PAT 4.7.8
    398 திரை பொரு கடல் சூழ் திண்மதில் துவரை வேந்து * தன் மைத்துனன்மார்க்காய் *
    அரசினை அவிய அரசினை அருளும் * அரி புருடோத்தமன் அமர்வு **
    நிரை நிரையாக நெடியன யூபம் * நிரந்தரம் ஒழுக்குவிட்டு * இரண்டு
    கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கைக் * கண்டம் என்னும் கடிநகரே (8)
  • PAT 4.7.9
    399 வட திசை மதுரை சாளக்கிராமம் * வைகுந்தம் துவரை அயோத்தி *
    இடம் உடை வதரி இடவகை உடைய * எம் புருடோத்தமன் இருக்கை **
    தடவரை அதிரத் தரணி விண்டு இடியத் * தலைப்பற்றிக் கரை மரம் சாடி *
    கடலினைக் கலங்கக் கடுத்து இழி கங்கைக் * கண்டம் என்னும் கடிநகரே (9)
  • PAT 4.7.10
    400 மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால் * மூன்று எழுத்து ஆக்கி * மூன்று எழுத்தை
    ஏன்று கொண்டு இருப்பார்க்கு இரக்கம் நன்கு உடைய * எம் புருடோத்தமன் இருக்கை **
    மூன்று அடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி * மூன்றினில் மூன்று உரு ஆனான் *
    கான் தடம்பொழில் சூழ் கங்கையின் கரைமேல் * கண்டம் என்னும் கடிநகரே (10)
  • PAT 4.7.11
    401 ## பொங்கு ஒலி கங்கைக் கரை மலி கண்டத்து * உறை புருடோத்தமன் அடிமேல் *
    வெங்கலி நலியா வில்லிபுத்தூர்க் கோன் * விட்டுசித்தன் விருப்பு உற்றுத் **
    தங்கிய அன்பால் செய் தமிழ் மாலை * தங்கிய நா உடையார்க்குக் *
    கங்கையில் திருமால் கழலிணைக் கீழே * குளித்திருந்த கணக்கு ஆமே (11)