PAT 4.10.9

ஆதியஞ்சோதியே! என்னைக் காக்கவேண்டும்

431 குன்றெடுத்துஆநிரைகாத்தஆயா!
கோநிரைமேய்த்தவனே! எம்மானே! *
அன்றுமுதல் இன்றறுதியா
ஆதியஞ்சோதி! மறந்தறியேன் *
நன்றும்கொடியநமன்தமர்கள்
நலிந்துவலிந்துஎன்னைப்பற்றும்போது *
அன்றங்குநீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
431 kuṉṟu ĕṭuttu ānirai kātta āyā * konirai meyttavaṉe ĕmmāṉe *
aṉṟu mutal iṉṟu aṟutiyāka * āti añ coti maṟantu aṟiyeṉ **
naṉṟum kŏṭiya namaṉtamarkal̤ * nalintu valintu ĕṉṉaip paṟṟumpotu *
aṉṟu aṅku nī ĕṉṉaik kākkaveṇṭum * araṅkattu aravaṇaip pal̤l̤iyāṉe (9)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

431. You my lord, are the cowherd who grazed the cows and carried Govardhanā mountain to protected them. You are the ancient light. From the day I was born until today I have never forgotten you. When the Kingarars, the cruel messengers of Yama, come, make me suffer and take hold of me, you should come and protect me. O lord, you rest on the snake bed on the ocean in Srirangam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குன்று எடுத்து கோவர்த்தன மலையை எடுத்து; ஆநிரை பசுக்களைக் காத்த ஆயனே!; கோநிரை மாடுகள் கூட்டத்தை; மேய்த்தவனே மேய்த்தவனே!; எம்மானே! எனக்கு ஸ்வாமியானவனே!; அரங்கத்து திருவரங்கத்தில்; அரவணை ஆதிசேஷன் மீது; பள்ளியானே! சயனித்திருப்பவனே!; அன்று முதல் அன்று முதல்; இன்று அறுதியாக இன்று வரை; ஆதி ஆதியான; அஞ் சோதி உன் தேஜோமய உருவத்தை; மறந்து அறியேன் நான் மறந்ததில்லை; நன்றும் கொடிய மிக்கக் கொடிய; நமன் தமர்கள் யமகிங்கரர்கள்; நலிந்து வலிந்து வலுக்கட்டாயமாகப் இழுத்து; என்னை என்னைப்; பற்றும் போது பிடிக்கும்போது; அன்று அங்கு அன்றைய தினம் அங்கே; நீ என்னை நீ என்னைக்; காக்க வேண்டும் காத்தருள வேண்டும்
ānirai You are the Cowherd who protected the cows; kuṉṟu ĕṭuttu by lifting the Govardhana hill; meyttavaṉe the One who grazed; konirai the herd of cattle; ĕmmāṉe! You are my Lord and Master!; pal̤l̤iyāṉe! the One who rests; aravaṇai on the Adisesha; araṅkattu at Sri Rangam; aṉṟu mutal from that day; iṉṟu aṟutiyāka until today; añ coti Your radiant form that are resplendent; āti and primordial; maṟantu aṟiyeṉ I have never forgotten that; namaṉ tamarkal̤ when the messengers of Yama who are; naṉṟum kŏṭiya very cruel; nalintu valintu forcefully drag me; paṟṟum potu and catch hold of; ĕṉṉai me; aṉṟu aṅku on that day, in that place; nī ĕṉṉai You must; kākka veṇṭum protect me with Your grace