PAT 4.10.3

அல்லல் படாவண்ணம் காத்திடு

425 எல்லையில்வாசல்குறுகச்சென்றால்
எற்றிநமன்தமர்பற்றும்போது *
நில்லுமினென்னும்உபாயமில்லை
நேமியும்சங்கமும்ஏந்தினானே! *
சொல்லலாம்போதேஉன்நாமமெல்லாம்
சொல்லினேன் என்னைக்குறிக்கொண்டுஎன்றும் *
அல்லல்படாவண்ணம்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
425 ĕllaiyil vācal kuṟukac cĕṉṟāl * ĕṟṟi namaṉ-tamar paṟṟumpotu *
nillumiṉ ĕṉṉum upāyam illai * nemiyum caṅkamum entiṉāṉe **
cŏllalām pote uṉ nāmam ĕllām * cŏlliṉeṉ ĕṉṉaik kuṟikkŏṇṭu ĕṉṟum *
allal paṭāvaṇṇam kākka veṇṭum * araṅkattu aravaṇaip pal̤l̤iyāṉe (3)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

425. When the Kingarars, the messengers of Yama, come to take me, even if I run to the front door of my house and beg them, saying, “Stop here” they will not do it. O lord with a discus and conch in your hands, whenever I can I worship you and praise you, saying all your names. You should protect me from all trouble and take care of me. O lord, you rest on the snake bed on the ocean in Srirangam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அரங்கத்து திருவரங்கத்தில்; அரவணை ஆதிசேஷன் மேல்; பள்ளியானே! சயனித்திருப்பவனே!; சங்கமும் சங்கையும்; நேமியும் சக்கரத்தையும்; ஏந்தினானே! கையில் ஏந்தியிருப்பவனே!; எல்லையில் ஆயுள் முடிவில்; வாசல் யமபுரத்து வாயில்; குறுகச் சென்றால் வழியாகச் சென்றால்; எற்றி நமன் தமர் யம கிங்கரர்கள் அடித்து; பற்றும் போது பிடிக்கும்போது; நில்லுமின் என்னும் தடுத்து நிறுத்தும்; உபாயம் ஒரு உபாயமும்; இல்லை என் கையில் இல்லை; சொல்லலாம் சொல்ல முடிந்த; போதே காலத்திலேயே; உன் நாமம் உன் நாமங்களை; எல்லாம் எல்லாம்; சொல்லினேன் சொன்னேன்; என்னை என்றும் என்னை என்றும்; குறிக்கொண்டு திருவுள்ளத்தில் குறித்துக் கொண்டு; அல்லல் யமபடர்களிடம்; படா வண்ணம் அல்லல் படாதபடி; காக்க வேண்டும் காப்பாற்ற வேண்டும்
pal̤l̤iyāṉe! the One who rests; aravaṇai on the snake bed (Adiseshan); araṅkattu in Sri Rangam; entiṉāṉe! the One who in the hands hold; caṅkamum the conch; nemiyum and the discus; ĕllaiyil at end of life; kuṟukac cĕṉṟāl while going through; vācal the gates of Yama's kingdom; ĕṟṟi namaṉ tamar when Yama's attendants hit; paṟṟum potu and catch me; illai i will not have; upāyam any solution; nillumiṉ ĕṉṉum to prevent that; pote therefore, at a time; cŏllalām when I am able to do it; cŏlliṉeṉ I recite; ĕllām all; uṉ nāmam Your names; ĕṉṉai ĕṉṟum please remember; kuṟikkŏṇṭu me in Your heart; kākka veṇṭum and protect me; paṭā vaṇṇam from sufferings in; allal the hand of Yama's messengers