PAT 4.10.1

அரவணைப்பள்ளிகொள் அரங்கனைப் போற்றல் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்

423 துப்புடையாரைஅடைவதெல்லாம்
சோர்விடத்துத்துணையாவரென்றே *
ஒப்பிலேனாகிலும்நின்னடைந்தேன்
ஆனைக்குநீஅருள்செய்தமையால் *
எய்ப்புஎன்னைவந்துநலியும்போது
அங்குஏதும்நானுன்னைநினைக்கமாட்டேன் *
அப்போதைக்குஇப்போதேசொல்லிவைத்தேன்
அரங்கத்தரவணைப்பள்ளியானே. (2)
423 ## tuppuṭaiyārai aṭaivatu ĕllām * corviṭattut tuṇai āvar ĕṉṟe *
ŏppileṉ ākilum niṉ aṭainteṉ * āṉaikku nī arul̤ cĕytamaiyāl **
ĕyppu ĕṉṉai vantu naliyumpotu * aṅku etum nāṉ uṉṉai niṉaikkamāṭṭeṉ *
appotaikku ippote cŏlli vaitteṉ * araṅkattu aravaṇaip pal̤l̤iyāṉe (1)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

423. When they are old, people go to others who are strong because they believe they will help them. Even though I am not worthy to approach you, I come to you for refuge because you saved the elephant Gajendra from the crocodile when it seized him. When I become old and my time comes to an end and I am suffering, I may not be able even to think of you. Now I have told you what my state will be then. O lord, you rest on the snake bed on the ocean in Srirangam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அரங்கத்து திருவரங்கத்தில்; அரவணை பாம்பணையில்; பள்ளியானே! பள்ளி கொண்டிருப்பவனே!; துப்புடையாரை காக்கும் திறனுடைய உன்னை; அடைவது எல்லாம் அடைவதன் காரணம்; சோர்வு இடத்து நம் உடல் நலிந்திடும் சமயம்; துணையாவர் என்றே நீ துணை நிற்பாய் என்று; ஒப்பிலேன் நான் யாருக்கும் ஈடானவன் அல்லன்; ஆகிலும் எனினும்; நின் அடைந்தேன் உன்னை அடைந்தேன்; ஆனைக்கு நீ யானை கஜேந்திரனுக்கு; அருள் செய்தமையால் அருள் செய்ததனால்; எய்ப்பு இளைப்பு; என்னை வந்து என்னை வந்து; நலியும் போது நலியச் செய்யும்போது; அங்கு ஏதும் அந்த சமயம் உன்னை நான்; நான் உன்னை நினக்க மாட்டாது போவேன்; அப்போதைக்கு அப்போதைக்காக; இப்போதே இந்திரியங்கள் தெளிவாக உள்ள இப்போதே; சொல்லி வைத்தேன் சொல்லி வைக்கிறேன் என்கிறார்
pal̤l̤iyāṉe! the One who rests; aravaṇai on the snake bed (Adiseshan); araṅkattu in Sri Rangam; aṭaivatu ĕllām the reason for reaching you; tuppuṭaiyārai who has the power to protect; tuṇaiyāvar ĕṉṟe is that You will stand by us; corvu iṭattu when our body is in a deteriorated state; ŏppileṉ I am not a match for anyone; ākilum still; niṉ aṭainteṉ I have sought refuge in you; arul̤ cĕytamaiyāl since You blessed; āṉaikku nī the elephant Gajendran; ĕyppu and when the weakness; ĕṉṉai vantu approaches me; naliyum potu and make me suffer; nāṉ uṉṉai i might not; aṅku etum think of You at that time; appotaikku for that time; cŏlli vaitteṉ I am saying this; ippote now when my senses are clear