PAT 4.1.5

ருக்மிணியைத் தேரேற்றிக் கொண்டு வந்த கண்ணன்

332 நீரேறுசெஞ்சடைநீலகண்டனும் நான்முகனும் * முறையால்
சீரேறுவாசகஞ்செய்யநின்ற திருமாலைநாடுதிரேல் *
வாரேறுகொங்கைஉருப்பிணியை வலியப்பிடித்துக்கொண்டு
தேரேற்றி * சேனைநடுவுபோர்செய்யச் சிக்கெனக்கண்டாருளர்.
332 nīr eṟu cĕñcaṭai nīlakaṇṭaṉum * nāṉmukaṉum muṟaiyāl *
cīr eṟu vācakañ cĕyya niṉṟa * tirumālai nāṭutirel **
vār eṟu kŏṅkai uruppiṇiyai * valiyap piṭittukkŏṇṭu
ter eṟṟi * ceṉai naṭuvu por cĕyyac * cikkĕṉak kaṇṭār ul̤ar (5)

Ragam

Tōdi / தோடி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

332. If you are searching for the divine Thirumāl, praised by Nānmuhan and Shivā with red tresses, where the Ganges flows, go to the people who were there and saw him when he took Rukmani, (whose breasts were covered ), on his chariot and her brother, Rukman came to oppose him on the way.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நீர் எம்பெருமானுடைய; ஏறு ஸ்ரீபாத தீர்த்தம் பரவிய; செஞ்சடை சிவந்த ஜடையையுடைய; நீலகண்டனும் சிவபெருமானும்; நான் முகனும் சதுமுகப்பிரம்மாவும்; முறையால் முறைப்படி; சீர் ஏறு சிறந்த; வாசகம் சொற்களைக் கொண்டு; செய்ய நின்ற துதித்து நின்ற; திருமாலை எம்பெருமானை; நாடுதிரேல் தேடுகிறீர்களாகில்; வார் ஏறு கச்சை அணிந்த; கொங்கை மார்பகத்தையுடைய; உருப்பிணியை ருக்மிணிப் பிராட்டியை; வலியப் பலாத்காரமாக; பிடித்துக் கொண்டு பிடித்துக்கொண்டு; தேர் ஏற்றி தனது தேரில் ஏற்றிக்கொண்டு; சேனை ருக்மனின் சேனைக்கு; நடுவு நடுவே நின்று; போர் செய்ய யுத்தம் செய்ய; சிக்கென திண்ணமாக; கண்டார் உளர் பார்த்தவர்கள் உள்ளனர்
nāṭutirel if you are searching; tirumālai for the Lord; cĕyya niṉṟa who was praised; vācakam using the words that; cīr eṟu were excellent; muṟaiyāl according to tradition; nīlakaṇṭaṉum by Lord Shiva; cĕñcaṭai with red matted hair; nāṉ mukaṉum and by Lord brahma; kaṇṭār ul̤ar there are those who have seen Him; eṟu as thirtham spreads from the feet of; cikkĕṉa completely; nīr the Lord; valiyap when He forcefully; piṭittuk kŏṇṭu grabbed; uruppiṇiyai Rukmini with; kŏṅkai the chest covered by; vār eṟu a dress; ter eṟṟi and lifted her onto His chariot; naṭuvu stood in the middle of; ceṉai the army; por cĕyya and fought