PAT 3.1.6

கன்றினால் விளவெறிந்தவன்

228 கரும்பார்நீள்வயல்காய்கதிர்ச்செந்நெலைக்
கற்றாநிரைமண்டித்தின்ன *
விரும்பாக்கன்றொன்றுகொண்டு
விளங்கனிவீழஎறிந்தபிரானே! *
சுரும்பார்மென்குழல்கன்னியொருத்திக்குச்
சூழ்வலைவைத்துத்திரியும் *
அரம்பா! உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன் அம்மம்தரவே.
228 karumpār nīl̤ vayal kāykatirc cĕnnĕlaik * kaṟṟānirai maṇṭit tiṉṉa *
virumpāk kaṉṟu ŏṉṟu kŏṇṭu * vil̤aṅkaṉi vīzha ĕṟinta pirāṉe **
curumpār mĕṉkuzhaṟ kaṉṉi ŏruttikkuc * cūzhvalai vaittut tiriyum *
arampā uṉṉai aṟintukŏṇṭeṉ * uṉakku añcuvaṉ ammam tarave (6)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

228. Once, when all cows were grazing happily on the flourishing fields humming with bees, you identified the Asuran who came as a false calf that didn't eat the paddy You threw him up, made the wood apples fall and killed him. O naughty one, you wander about and made a young girl whose soft curly hair is filled with bees fall in love with you. Dear child, I know who you are and I’m afraid to give you food.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நீள் வயல் பரந்து விரிந்த; கரும்பார் கரும்பு வயல் போல்; காய்கதிர் பச்சைகாயாக; செந்நெலை உள்ள கதிர்களை; கற்றாநிரை கன்றுகளோடு கூடின ஆவினங்கள்; மண்டித் தின்ன நெருக்கியடித்து மேய்ந்து கொண்டிருக்க; விரும்பா மேய விரும்பாமல் இருந்த; கன்று ஒரு மாயக்கன்றை; ஒன்று கொண்டு பற்றி எடுத்து; விளங்கனி மரத்திலுள்ள விளாங்கனிகள்; வீழ கீழே வீழ்ந்திட; எறிந்த பிரானே! வீசி எறிந்த எம்மானே; சுரும்பார் வண்டுகள் மொய்க்கும்; மென்குழல் மென்மையான தலைமுடியை; கன்னி உள்ள பெண்; ஒருத்திக்கு ஒருத்தியை வசப்படுத்திக்கொள்ள; சூழ்வலை கண்களென்னும் வலை; வைத்துத் திரியும் விரித்துத்திரியும்; அரம்பா! பொல்லாதவனே!; உன்னை நீ யாரென்று!; அறிந்து கொண்டேன் இன்று அறிந்து கொண்டேன்; உனக்கு அஞ்சுவன் உன்னைக் கண்டு அஞ்சுகிறேன்; அம்மம் தரவே பால் கொடுப்பதற்கே
kaṟṟānirai when cows with calfs; maṇṭit tiṉṉa were grazing; nīl̤ vayal the expansive; karumpār sugarcane; kāykatir and green; cĕnnĕlai paddy fields; ĕṟinta pirāṉe! You are the One who; kaṉṟu identified one cow; virumpā that was not interested in grazing as an asuran; ŏṉṟu kŏṇṭu threw it and; vil̤aṅkaṉi made the wood apples; vīḻa fall; cūḻvalai with Your beautiful eyes; vaittut tiriyum as a net; ŏruttikku You attracted; kaṉṉi a girl with; mĕṉkuḻal soft curly hair; curumpār filled with bees; arampā! oh Naughty one!; aṟintu kŏṇṭeṉ today I came to know; uṉṉai who You are!; uṉakku añcuvaṉ I am scared; ammam tarave can I give You milk?