PAT 2.8.6

மஞ்சுதவழ் மணிமாட வெள்ளறை நின்றவன்

197 கஞ்சன்கறுக்கொண்டுநின்மேல் கருநிறச்செம்மயிர்ப்பேயை *
வஞ்சிப்பதற்குவிடுத்தானென்பது ஓர்வார்த்தையும்உண்டு *
மஞ்சுதவழ்மணிமாட மதிள்திருவெள்ளறைநின்றாய்! *
அஞ்சுவன்நீஅங்குநிற்க அழகனே! காப்பிடவாராய்.
197 kañcaṉ kaṟukkŏṇṭu niṉmel * karu niṟac cĕm mayirp peyai *
vañcippataṟku viṭuttāṉ * ĕṉpatu or vārttaiyum uṇṭu **
mañcu tavazh maṇi māṭa * matil̤ tiruvĕl̤l̤aṟai niṉṟāy!
añcuvaṉ nī aṅku niṟka * azhakaṉe kāppiṭa vārāy (6)

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

197. There's a word that Kamsan, out of vengeance, has sent the dark red-haired devil(Poothana) to cheat and kill You. You are the One residing in the beautiful Thiruvellarai that is surrounded by walls and filled with diamond-studded palaces over which the clouds scud. I am afraid you will be hurt if you stay there. O beautiful child, come and I will put kāppu on you so that evil eyes will not harm you.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கஞ்சன் கம்சன்; கறுக்கொண்டு நின்மேல் வன்மம் கொண்டு; செம் மயிர்ப் பேயை சிவப்பு தலைமுடியுடைய; கரு நிற கரும்பேயை; வஞ்சிப்பதற்கு வஞ்சனை செய்ய; விடுத்தான் அனுப்பினான்; என்பது ஓர் என்று ஒரு; வார்த்தையும் உண்டு பேச்சும் உண்டு; மஞ்சு தவழ மேகம் தவழும்; மணி மாட மணி மாடம் மற்றும்; மதிள் மதில்களையும் உடைய; திருவெள்ளறை திருவெள்ளறையில்; நின்றாய்! நிற்கின்றவனே!; அஞ்சுவன் அச்சமேற்படுகிறது; நீ அங்கு நிற்க அங்கு நிற்பதைப் பார்த்து; அழகனே! அழகிய பிரானே!; காப்பிட வாராய் காப்பு இட வாராய்!
ĕṉpatu or there is; vārttaiyum uṇṭu a word; kañcaṉ that Kamsan; kaṟukkŏṇṭu niṉmel because of his wickedness; viṭuttāṉ had sent; karu niṟa a black demon; cĕm mayirp peyai with red hair; vañcippataṟku to kill You; niṉṟāy! You reside !; tiruvĕl̤l̤aṟai at Thiruvellarai; maṇi māṭa that contains beautiful palaces; mañcu tavaḻa with scudded clouds; matil̤ and walls; añcuvaṉ I am afraid you will be hurt; nī aṅku niṟka if You stay there; aḻakaṉe! Oh beautiful Lord!; kāppiṭa vārāy come to get a kappu!