PAT 2.8.5

திருவெள்ளறை ஞானச்சுடர்

196 பல்லாயிரவர்இவ்வூரில்பிள்ளைகள் தீமைகள்செய்வார் *
எல்லாம்உன்மேலன்றிப்போகாது எம்பிரான்! நீஇங்கேவாராய் *
நல்லார்கள்வெள்ளறைநின்றாய்! ஞானச்சுடரே! உன்மேனி *
சொல்லாரவாழ்த்திநின்றேத்திச் சொப்படக்காப்பிடவாராய்.
196 pallāyiravar iv ūril pil̤l̤aikal̤ * tīmaikal̤ cĕyvār *
ĕllām uṉmel aṉṟip pokātu * ĕmpirāṉ nī iṅke vārāy **
nallārkal̤ vĕl̤l̤aṟai niṉṟāy * ñāṉac cuṭare uṉmeṉi *
cŏl āra vāzhtti niṉṟu ettic * cŏppaṭak kāppiṭa vārāy (5)

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

196. Even if thousands of children from this village do mischiefs, people will say you did them. O beloved one, come. You stay in Thiruvellarai where good people live and you are the light of wisdom. I will praise your beautiful body. Come and I will put kāppu on you to save you from evil eyes.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நல்லார்கள் வெள்ளறை நல்லவர் வாழ் வெள்ளறையில்; நின்றாய்! நின்று அருளுபவனே!; ஞானச்சுடரே! அறிவொளியே!; பல்லாயிரவர் இவ்வூரில் இவ்வூரில் கணக்கற்ற; பிள்ளைகள் பிள்ளைகள்; தீமைகள் செய்வார் செய்யும் குறும்புகள்; எல்லாம் உன்மேல் அன்றி எல்லாம் உன்னைத் தவிர; போகாது வேறொருவர் மீது பழி விழாது; எம்பிரான்! எம்பிரானே!; நீ இங்கே வாராய் நீ இங்கே வாராய்; உன்மேனி உன் மேனியை; சொல் ஆர வாழ்த்தி வாயார வாழ்த்தி; நின்று ஏத்தி மங்களாசாஸனம் பண்ணி; சொப்பட திண்ணமாகக்; காப்பிட வாராய் நான் காப்பிடுகிறேன் வருவாய்!
niṉṟāy! You stand and bless devotees; nallārkal̤ vĕl̤l̤aṟai at Thiruvellarai where good people reside; ñāṉaccuṭare! Oh light of wisdom; pallāyiravar ivvūril in this town; pokātu people always blame You; ĕllām uṉmel aṉṟi for all the; tīmaikal̤ cĕyvār mischiefs done by; pil̤l̤aikal̤ countless other children; ĕmpirāṉ! Oh Lord!; nī iṅke vārāy You come here; cŏl āra vāḻtti I will praise; uṉmeṉi Your beautiful body; niṉṟu etti worship You; cŏppaṭa firmly; kāppiṭa vārāy come to get a kappu