PAT 2.8.3

திருவெள்ளறை எம்பிரான்

194 செப்போதுமென்முலையார்கள் சிறுசோறும்இல்லும்சிதைத்திட்டு *
அப்போதுநானுரப்பப்போய் அடிசிலுமுண்டிலைஆள்வாய்! *
முப்போதும்வானவரேத்தும் முனிவர்கள்வெள்ளறைநின்றாய்! *
இப்போதுநான்ஒன்றும்செய்யேன் எம்பிரான்! காப்பிடவாராய்.
194 cĕppu otu mĕṉmulaiyārkal̤ * ciṟucoṟum illum citaittiṭṭu *
appotu nāṉ urappap poy * aṭicilum uṇṭilai āl̤vāy **
mup potum vāṉavar ettum * muṉivarkal̤ vĕl̤l̤aṟai niṉṟāy!
ippotu nāṉ ŏṉṟum cĕyyeṉ * ĕmpirāṉ kāppiṭa vārāy (3)

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

194. When you knocked down the play houses of the girls who have soft, tiny breasts and messed up with their play- food, I scolded you, you ran away and haven’t come back to eat. O, my master, You reside in Thiruvellarai where rishis live and the gods worship you thrice a day. Now I won’t do anything to hurt you. O beloved child, come and I will put kāppu on you to save you from evil eyes.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முப்போதும் முக்காலமும்; வானவர் ஏத்தும் தேவர்களால் துதிக்கப்படுபவனாய்; முனிவர்கள் முனிவர்கள் வாழும்; வெள்ளறை வெள்ளறையில்; நின்றாய்! நிற்கின்றாய்!; ஆள்வாய்! என்னை ஆளவந்தவனே!; எம்பிரான்! எம்பிரானே!; செப்பு ஓது மென் செப்பு போன்ற; முலையார்கள் மார்பழகுடையவர்களின்; சிறுசோறும் மணல் சோறு மற்றும்; இல்லும் வீட்டையும்; சிதைத்திட்டு அழித்தாய்; அப்போது நான் அப்போது நான்; உரப்பப் போய் கடுமையாகக் கூற; அடிசிலும் நீ சோற்றை; உண்டிலை உண்ணவில்லை; இப்போது நான் ஒன்றும் இப்போது நான் ஒன்றும்; செய்யேன் செய்ய மாட்டேன்; காப்பிட வாராய் காப்பிட வருவாயே!
niṉṟāy! You reside; vĕl̤l̤aṟai at Thiruvellarai; muṉivarkal̤ where rishis live; vāṉavar ettum and the gods worship You; muppotum thrice a day; ĕmpirāṉ! Oh Lord!; āl̤vāy! my ruler of the world!; citaittiṭṭu You mischievously destroyed; illum the play house; ciṟucoṟum and play food; mulaiyārkal̤ of young girls with breasts that were; cĕppu otu mĕṉ soft and tiny; appotu nāṉ at that time; urappap poy when I scolded You; uṇṭilai You did not; aṭicilum eat the food; cĕyyeṉ I wont do; ippotu nāṉ ŏṉṟum anything now; kāppiṭa vārāy come and get a kappu