PAT 2.6.9

விபீடணனுக்கு அரசளித்த வேங்கடவாணன்

180 தென்னிலங்கைமன்னன் சிரம்தோள்துணிசெய்து *
மின்னிலங்குபூண் விபீடணநம்பிக்கு *
என்னிலங்குநாமத்தளவும் அரசென்ற *
மின்னிலங்காரற்குஓர்கோல்கொண்டுவா
வேங்கடவாணற்குஓர்கோல்கொண்டுவா.
180 tĕṉ ilaṅkai maṉṉaṉ * ciram tol̤ tuṇicĕytu *
miṉ ilaṅkum pūṇ * vipīṭaṇa nampikku **
ĕṉ ilaṅkum nāmattu al̤avum * aracu ĕṉṟa *
miṉ alaṅkāraṟku or kol kŏṇṭu vā * veṅkaṭa vāṇaṟku or kol kŏṇṭu vā (9)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

180. O crow, he cut off the heads and arms of Rāvanan, the king of Lankā in the south, and gave the country to Vibhishanā with shining ornaments, saying, “You will rule this country as long as my name abides in the world. ” Bring a grazing stick for the beautiful one, who shines like lightning and stays in the Thiruvenkatam hills. Bring a grazing stick for him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தென் இலங்கை தெற்கு திசையிலுள்ள இலங்கையின்; மன்னன் அரசனான ராவணனுடைய; சிரம் தோள் தலைகளையும் தோள்களையும்; துணிசெய்து துண்டித்தவனும்; மின் இலங்கு பூண் மின்னுகிற ஆபரணங்களை; விபீடணன் நம்பிக்கு அணிந்த விபீஷணனுக்கு; என் இலங்கு நாமத்து அளவும் என் பெயர் உள்ளளவும்; அரசு என்ற நீ அரசாள்வாய் என்று கூறிய; மின் அலங்காரற்கு மின்னும் ஹாரமணிந்தவனுக்கு; ஓர் கோல் கொண்டு வா ஒரு கோலைக் கொண்டுவா; வேங்கட வாணர்க்கு வேங்கடவாணனுக்கு; ஓர் கோல் கொண்டு வா ஒரு கோலைக் கொண்டுவா
tuṇicĕytu for the One who cut off the; ciram tol̤ heads and arms of; maṉṉaṉ king ravana who ruled; tĕṉ ilaṅkai Lanka located in the south; miṉ alaṅkāraṟku for the shining One; aracu ĕṉṟa who gave the kingdom to; vipīṭaṇaṉ nampikku Vibhishanā; miṉ ilaṅku pūṇ who wore shining ornamets; ĕṉ ilaṅku nāmattu al̤avum and asked him to rule until the name of Rama abides; or kol kŏṇṭu vā bring a grazing stick; veṅkaṭa vāṇarkku for the One who resides in Thiruvenkatam hills; or kol kŏṇṭu vā bring a grazing stick