PAT 2.3.9

முறுவலிடும் சிரீதரன்

147 மெய்யென்றுசொல்லுவார்சொல்லைக்கருதித்
தொடுப்புண்டாய்வெண்ணெயையென்று *
கையைப்பிடித்துக்கரையுரலோடுஎன்னைக்
காணவேகட்டிற்றிலையே *
செய்தனசொல்லிச்சிரித்துஅங்குஇருக்கில்
சிரீதரா! உன்காதுதூரும் *
கையில்திரியையிடுகிடாய் இந்நின்ற
காரிகையார்சிரியாமே
147 mĕy ĕṉṟu cŏlluvār cŏllaik karutit * tŏṭuppuṇṭāy vĕṇṇĕyai ĕṉṟu *
kaiyaip piṭittuk karai uraloṭu ĕṉṉaik * kāṇave kaṭṭiṟṟilaiye? **
cĕytaṉa cŏllic cirittu aṅku irukkil * cirītarā uṉkātu tūrum *
kaiyil tiriyai iṭukiṭāy inniṉṟa * kārikaiyār ciriyāme (9)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

147. O Sridhara, you complain saying, “Mother, you believed what others said and punished me. Isn’t it true you thought I had stolen the butter? And didn’t you pull me and tie me to the mortar? Everyone saw me tied to the mortar and made fun of me. ” O, dear child, If you keep narrating what happened, laughing and staying away, the holes in your ears will close. Come, I will put the thread in your ears before the beautiful women standing here laugh at you.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சொல்லுவார் பிறர் சொல்லை; மெய் என்று உண்மையென்று கருதி; தொடுப்புண்டாய் கள்ளத்தனமாக உண்டாய் என்று; கையைப் பிடித்து என் கையைப் பிடித்து; கரை உரலோடு விளிம்புள்ள உரலோடு; என்னைக் காணவே யாவரும் காணும்படி; கட்டிற்றிலையே? கட்டவில்லையோ?; சிரீதரா! கண்ணபிரானே!; செய்தன என நான்; சொல்லி செய்ததைச் சொல்லி; சிரித்து சிரித்துக் கொண்டு; அங்கு இருக்கில் தூரத்திலேயே நீ இருந்தால்; உன் காது தூரும் உன் காது தூர்ந்துவிடும்; இந்நின்ற காரிகையார் இங்குள்ள பெண்கள்; சிரியாமே வெறும் காதைபார்த்துப் சிரிக்காதிருக்க!; கையில் திரியை என் கைத் திரியை; இடுகிடாய் போட்டுக் கொள் கண்ணா!
cŏlluvār believing what others said; mĕy ĕṉṟu is truth; tŏṭuppuṇṭāy that I stole and ate butter; kaiyaip piṭittu you hold me by My hand; ĕṉṉaik kāṇave when everyone was looking at me; kaṭṭiṟṟilaiye? aint you tied Me?; karai uraloṭu to a mortar; cirītarā! Kanna!; aṅku irukkil if You stay away; cirittu smiling and; cŏlli telling what; cĕytaṉa I did; uṉ kātu tūrum the bores in Your ears will close; inniṉṟa kārikaiyār to avoid women; ciriyāme lauging at your bare ears!; kaiyil tiriyai allow me to insert the threads; iṭukiṭāy into the pierced ears Kanna!