PAT 2.3.8

கருடக்கொடியோன் வாமனன்

146 என்குற்றமேயென்றுசொல்லவும்வேண்டாகாண்
என்னைநான்மண்ணுண்டேனாக *
அன்புற்றுநோக்கிஅடித்தும்பிடித்தும்
அனைவர்க்கும்காட்டிற்றிலையே *
வன்புற்றரவின்பகைக்கொடிவாமனநம்பீ!
உன்காதுகள்தூரும் *
துன்புற்றனவெல்லாம்தீர்ப்பாய்பிரானே!
திரியிட்டுச்சொல்லுகேன்மெய்யே
146 ĕṉ kuṟṟame ĕṉṟu cŏllavum veṇṭā kāṇ * ĕṉṉai nāṉ maṇ uṇṭeṉāka *
aṉpuṟṟu nokki aṭittum piṭittum * aṉaivarkkum kāṭṭiṟṟilaiye? **
vaṉ puṟṟu araviṉ pakaik kŏṭi * vāmaṉa nampī uṉkātukal̤ tūrum *
tuṉpuṟṟaṉa ĕllām tīrppāy pirāṉe * tiriyiṭṭuc cŏllukeṉ mĕyye (8)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

146 O dear child! you complained, “See, mother, you shouldn’t say it is my fault. When I ate mud, you caught me and hit me. Didn’t you show your friends my mouth and tell them I had eaten mud?” O dear one, Vāmana! You have on your flag the eagle the enemy of the evil snake. If I do not put threads in, the holes on your ears will close. O beloved lord who removes the troubles of your devotees, I’m telling you the truth, I won’t hurt you. Come and let me put in the thread.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் குற்றமே என்று என் தப்பு என்று; சொல்லவும் நீ சொல்ல; வேண்டா காண் வேண்டியதில்லை பார்; நான் மண் உண்டேனாக ’நான் மண் உண்டேன்’ என்று; அன்புற்று அன்போடு என் வாயை; நோக்கி மண் சுவடு உண்டோ என்று பார்த்து; அடித்தும் பிடித்தும் அடித்தும் பிடித்தும்; அனைவர்க்கும் அனைவருக்கும்; காட்டிற்றிலையே? என் வாயைக் காட்டவில்லை?; வன் புற்று கொடிய புற்று; அரவின் பகை நாகத்தின் பகைவனான; கொடி கருடனை கொடியாகக் கொண்டவனே!; வாமன நம்பீ! வாமன நம்பியே!; உன் காதுகள் கண்ணா உன் காதுத் துளை; தூரும் துந்து போய்விடும்; துன்புற்றன எல்லாம் மக்களின் துன்பங்களைத்; தீர்ப்பாய் பிரானே! தீர்ப்பவனே! எம்பிரானே!; திரியிட்டு திரியிட்டுக் கொள் பின்; சொல்லுகேன் சொல்கிறேன்; மெய்யே அடிக்க பிடிக்கமாட்டேன் என்று
veṇṭā kāṇ You dont have to; cŏllavum say; ĕṉ kuṟṟame ĕṉṟu that its my fault; nāṉ maṇ uṇṭeṉāka thinking that I ate mud; nokki you checked to see traced of mud in; aṉpuṟṟu my mouth; aṭittum piṭittum you caught hold of me and gave beatings; kāṭṭiṟṟilaiye? you also showed my mouth?; aṉaivarkkum to everyone; kŏṭi You have in your flag, Garuda; araviṉ pakai the enemy of the snake; vaṉ puṟṟu that resides in wicked nest; vāmaṉa nampī! Oh Vamana!; uṉ kātukal̤ Kanna, the holes in your ear lobes; tūrum will close; tīrppāy, pirāṉe! Oh Lord!; tuṉpuṟṟaṉa ĕllām who remove the sufferings; tiriyiṭṭu please allow me to insert the threads; cŏllukeṉ then I will tell You; mĕyye that I will not catch and hit You