PAT 2.3.11

சகடமுதைத்த பத்மநாபன்

149 கண்ணைக்குளிரக்கலந்துஎங்கும்நோக்கிக்
கடிகமழ்பூங்குழலார்கள் *
எண்ணத்துள்என்றும்இருந்துதித்திக்கும்
பெருமானே! எங்களமுதே *
உண்ணக்கனிகள்தருவன் கடிப்பொன்றும்
நோவாமேகாதுக்கிடுவன் *
பண்ணைக்கிழியச்சகடமுதைத்திட்ட
பற்பநாபா! இங்கேவாராய்
149 kaṇṇaik kul̤irak kalantu ĕṅkum nokkik * kaṭikamazh pūṅkuzhalārkal̤ *
ĕṇṇattul̤ ĕṉṟum iruntu * tittikkum pĕrumāṉe ĕṅkal̤ amute **
uṇṇak kaṉikal̤ taruvaṉ * kaṭippu ŏṉṟum novāme kātukku iṭuvaṉ *
paṇṇaik kizhiyac cakaṭam utaittiṭṭa * paṟpanāpā * iṅke vārāy (11)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

149. O Lord! You stay sweetly in the thoughts of the beautiful girls whose hair is decorated with fragrant flowers who always look at you with love. You are our sweet nectar. I will give you fruits to eat. I will put the thread in your ears without hurting you, O Padmanābhā, who kicked Sakatāsuran when he came as a cart and killed him. Come here.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கடிகமழ் மணம் மிக்க; பூங்குழலார்கள் மலர்களணிந்த கூந்தலார்கள்; கண்ணைக் குளிர கண் குளிர; எங்கும் எல்லாபக்கமும்; கலந்து உன் அவயவ சோபையை; நோக்கி பார்த்து; எண்ணத்துள் உன்னோடு கலக்க விரும்பி; என்றும் இருந்து எப்போதும் பொருந்தி இருந்து; தித்திக்கும் அவர்களுக்கு இனிப்பூட்டும்; பெருமானே! பெருமானே!; எங்கள் அமுதே! எங்களுடைய அமிர்தமே!; பண்ணைக் கிழியச் உருக்குலையும்படி; சகடம் உதைத்திட்ட சகடாசுரனை உதைத்த; பற்பனாபா! பத்மநாபனே!; உண்ண உண்பதற்குப்; கனிகள் தருவன் பழங்கள் தருவேன்; ஒன்றும் சிறிதும்; நோவாமே நோகாதபடி; காதுக்கு உன் காதில்; கடிப்பு இடுவன் கடுக்கன் அணிவிப்பேன்; இங்கே வாராய் நீயே விரும்பி இங்கு என்னிடம் வருவாய்
tittikkum You bring sweetness to the Women; pūṅkuḻalārkal̤ with hair containing flowers; kaṭikamaḻ emanating wonderful fragrance; nokki they look; kalantu at You; ĕṅkum in all directions; kaṇṇaik kul̤ira with great satisfaction; ĕṉṟum iruntu You always remain; ĕṇṇattul̤ in their minds; pĕrumāṉe! Perumaney!; ĕṅkal̤ amute! You are our nectar!; cakaṭam utaittiṭṭa You struck Shakatasura; paṇṇaik kiḻiyac and destroyed him; paṟpaṉāpā! Padmanabaney!; kaṉikal̤ taruvaṉ I will give You; uṇṇa fruits to eat; kaṭippu iṭuvaṉ I will insert earrings; kātukku in Your ear bores; novāme without causing; ŏṉṟum any pain; iṅke vārāy please come on Your own