PAT 2.3.10

கன்றெறிந்த இருடீகேசன்

148 காரிகையார்க்கும்உனக்கும்இழுக்குற்றென்?
காதுகள்வீங்கியெரியில் *
தாரியாதாகில்தலைநொந்திடுமென்று
விட்டிட்டேன்குற்றமேயன்றே *
சேரியிற்பிள்ளைகளெல்லாரும் காது
பெருக்கித்திரியவும்காண்டி *
ஏர்விடைசெற்றுஇளங்கன்றுஎறிந்திட்ட
இருடீகேசா! என்தன்கண்ணே
148 kārikaiyārkkum uṉakkum izhukku uṟṟu ĕṉ * kātukal̤ vīṅki ĕriyil? *
tāriyā tākil talai nŏntiṭum ĕṉṟu * viṭṭiṭṭeṉ kuṟṟame aṉṟe? **
ceriyil pil̤l̤aikal̤ ĕllārum kātu pĕrukkit * tiriyavum kāṇṭi *
er viṭai cĕṟṟu il̤aṅkaṉṟu ĕṟintiṭṭa * iruṭikecā ĕṉtaṉ kaṇṇe <10>

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

148. O dear child, you said, “Mother, what would it matter to you and these lovely women if my ears swell up and hurt?” I didn’t put the thread in your ears when you were young because I was worried it might hurt you. It is my fault. Don’t you see how all the children wandering around the cowherd village have had threads put in their ears? O Rishikesha, you killed Arishtasuran and Vasthasuran by throwing a young calf at them.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காதுகள் வீங்கி எரியில் என் காதுகள் வீங்கி எரிந்தால்; காரிகையார்க்கும் பெண்களுக்கும்; உனக்கும் உனக்கும்; இழுக்கு உற்று என் உங்களுக்கு என்ன கஷ்டம்; தாரியா தாகில் காதில் திரியயை இடாமற்போனால்; தலை நொந்திடும் என்று தலைவலி ஏற்படும் என்று; விட்டிட்டேன் விட்டது; குற்றமே அன்றே என் குற்றமன்றோ; ஏர் விடை அழகிய ரிஷபமாக வந்த; செற்று அசுரனை வென்று; இளங்கன்று கன்றுருவில் வந்த; எறிந்திட்ட அசுரனையும் வென்ற; இருடீகேசா! ரிஷிகேசனே!; சேரியில் இந்த இடைச்சேரியில் பிறந்த; பிள்ளைகள் எல்லாரும் பிள்ளைகள் எல்லோரும்; காது காதுத் துளை; பெருக்கித் பெருக்கி கொண்டு; திரியவும் திரிவதை; காண்டி காண்பாய்; என் தன் கண்ணே! எனனுடைய கண்மணியே
iḻukku uṟṟu ĕṉ what would it matter to; uṉakkum you; kārikaiyārkkum and the women; kātukal̤ vīṅki ĕriyil if my ears swell and hurt; talai nŏntiṭum ĕṉṟu thinking it might hurt You; viṭṭiṭṭeṉ and not putting; tāriyā tākil the thread when You were young; kuṟṟame aṉṟe was my fault; iruṭīkecā! Oh Rishikesha !; cĕṟṟu You won against the asura; er viṭai who came as a bull; ĕṟintiṭṭa and You won against the asura; il̤aṅkaṉṟu who came as a calf; ĕṉ taṉ kaṇṇe! my Kanna; kāṇṭi see; pil̤l̤aikal̤ ĕllārum all the children; ceriyil born in Aiyarpadi; tiriyavum wandering; pĕrukkit with their; kātu ears pierced