NAT 9.4

அழகரின் திருமேனி நிறம் உங்களுக்கு எதற்கு?

590 பைம்பொழில்வாழ்குயில்காள்! மயில்காள்! ஒண்கருவிளைகாள் *
வம்பக்களங்கனிகாள்! வண்ணப்பூவை நறுமலர்காள்! *
ஐம்பெரும்பாதகர்காள்! அணிமாலிருஞ்சோலைநின்ற *
எம்பெருமானுடையநிறம் உங்களுக்கெஞ்செய்வதே?
590 paimpŏzhil vāzh kuyilkāl̤ mayilkāl̤ * ŏṇ karuvil̤aikāl̤ *
vampak kal̤aṅkaṉikāl̤ * vaṇṇap pūvai naṟumalarkāl̤ **
aim pĕrum pātakarkāl̤ * aṇi māliruñcolai niṉṟa *
ĕmpĕrumāṉuṭaiya niṟam * uṅkal̤ukku ĕṉ cĕyvate? (4)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

590. O cuckoo birds in the flourishing groves! Peacocks! Beautiful karuvilai blossoms! Fresh kala fruits! Colorful fragrant kāyām flowers! You are my five most powerful enemies. Why must you have the color of the dear lord of beautiful Thirumālirunjolai? Is it to make me sad with love and hurt me?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பைம்பொழில் பரந்த சோலையில்; வாழ் வாழ்கின்ற; குயில்காள்! குயில்களே!; மயில்காள்! மயில்களே!; ஒண் அழகிய; கருவிளைகாள்! காக்கணம் பூக்களே!; வம்ப புதிய; களங்கனிகாள்! களாப்பழங்களே!; வண்ண வண்ணமும்; பூவை நறுமலர்காள்! மணமுள்ள பூக்களே!; ஐம் பெரும் பஞ்சமகா; பாதகர்காள்! பாதகர்கள் போன்றவர்களே!; அணிமாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையிலுள்ள; நின்ற எம்பெருமானுடைய எம்பெருமானின்; நிறம் என் செய்வதே மேனி நிறத்தை; உங்களுக்கு எதுக்காக ஏற்று நீங்கள் எதற்காக ஏற்று; கொண்டது கொண்டுள்ளீர்கள் நான் துன்பப்படவா?

Detailed WBW explanation

O cuckoo birds that reside in the vast gardens! O majestic peacocks! O exquisite karuvilai flowers, wild creepers adorned with dark blue blossoms! O fresh barberries! O kayā flowers, resplendent in hue and fragrance! O you five, each akin to a captivating criminal! Why do you all bear the enchanting complexion of Thirumālirunjolai Azhagar? Is it, perchance, to torment me with such divine resemblance?