NAT 8.9

பாம்பணையான் வார்த்தை பொய்த்து விடுமோ?

585 மதயானைபோலெழுந்த மாமுகில்காள் * வேங்கடத்தைப்
பதியாகவாழ்வீர்காள்! பாம்பணையான்வார்த்தையென்னே! *
கதியென்றும்தானாவான் கருதாது * ஓர்பெண்கொடியை
வதைசெய்தான்என்னும்சொல் வையகத்தார்மதியாரே. (2)
585 mata yāṉai pol ĕzhunta * mā mukilkāl̤ * veṅkaṭattaip
patiyāka vāzhvīrkāl̤ * pāmpu-aṇaiyāṉ vārttai ĕṉṉe ! **
kati ĕṉṟum tāṉ āvāṉ * karutātu or pĕṇ-kŏṭiyai
vatai cĕytāṉ ĕṉṉum cŏl * vaiyakattār matiyāre? (9)

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Divya Desam

Simple Translation

585. O huge clouds rising like rutting elephants, you think Thiruvenkatam is your place and live there. What does He, resting on the snake bed, wish to tell me? If people know that He who is the refuge for all, ignored a fragile vine-like tender girl and hurt her, will they respect Him?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
வேங்கடத்தை திருமலையை; பதியாக இருப்பிடமாக்கி; வாழ்வீர்காள்! வாழ்பவர்களே!; மத மதம் பிடித்த; யானை போல் யானை போல்; எழுந்த மா எழுந்த; முகில்காள்! காளமேகங்களே!; பாம்பு பாம்பின் மீது; அணையான் சயனித்திருக்கும் பிரான்; வார்த்தை வார்த்தையானது; என்னே? யாது?; தான் அப்பெருமான்; என்றும் எப்போதும்; கதி காப்பவனாயிருக்கும்; ஆவான் தன்மையை; கருதாது நினையாமல்; ஓர் பெண் கொடியை ஒரு பெண்பிள்ளையை; வதை செய்தான் வதை செய்தான்; என்னும் சொல் என்னும் சொல்லை; வையகத்தார் இப்பூமியிலுள்ளவர்கள்; மதியாரே மதிக்கமாட்டார்களே
vāḻvīrkāl̤! o clouds, you live; veṅkaṭattai in Tirumala hills; patiyāka as your dewlling place; mukilkāl̤! o dark clouds!; ĕḻunta mā you rise in the sky; yāṉai pol like an elephant that is; mata enraged; aṇaiyāṉ the Lord who rests; pāmpu on a snake; ĕṉṉe? what does He?; vārttai have to say; ĕṉṉum cŏl if people start saying that; tāṉ the Lord; karutātu has not remembered; āvāṉ His quality of; ĕṉṟum always; kati protecting us; vatai cĕytāṉ and tortured; or pĕṇ kŏṭiyai a young girl; vaiyakattār the people of the world; matiyāre will not respect Him

Detailed WBW explanation

In the ninth pāsuram, the devout soul implores the clouds, serving as celestial messengers, to convey a poignant message to the Lord. She entreats them to inform Him that should He prolong her anguish and separation, it may indeed tarnish His esteemed reputation as the protector and lover of His devotees. This plea highlights her intense longing and the deep connection she feels with the Divine, while also subtly reminding the Lord of His duty to uphold the righteousness and care for His devotees.