NAT 8.6

நாரணற்கு எனது மெலிவைச் செப்புமின்

582 சலங்கொண்டுகிளர்ந்தெழுந்த தண்முகில்காள்! * மாவலியை
நிலங்கொண்டான்வேங்கடத்தே நிரந்தேறிப்பொழிவீர்காள் *
உலங்குண்டவிளங்கனிபோல் உள்மெலியப்புகுந்து * என்னை
நலங்கொண்டநாரணற்கு என்நடலைநோய்செப்புமினே.
582 calaṅ kŏṇṭu kil̤arntu ĕzhunta * taṇ mukilkāl̤ ! * māvaliyai
nilaṅ kŏṇṭāṉ veṅkaṭatte * nirantu eṟip pŏzhivīrkāl̤ ! **
ulaṅku uṇṭa vil̤aṅkaṉi pol * ul̤ mĕliyap pukuntu * ĕṉṉai
nalaṅ kŏṇṭa nāraṇaṟku * ĕṉ naṭalai-noy cĕppumiṉe (6)

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Divya Desam

Simple Translation

582. O cool clouds, that take water from the ocean, rise to the sky and pour as rain in Thiruvenkatam of Thirumāl who took the land from Mahābali! Like insects that swarm into a wood apple and eat it, leaving the shell, Nāranan has entered into my heart and made me suffer. Go and tell him how much I love him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சலம் கடல் நீரை; கொண்டு எடுத்துக் கொண்டு; கிளர்ந்து கிளம்பி எழும்பி; எழுந்த விளங்குகின்ற; தண் குளிர்ந்த; முகில்காள்! மேகங்களே!; மாவலியை மஹாபலியிடமிருந்து; நிலம் பூமியை; கொண்டான் பெற்ற எம்பிரான்; வேங்கடத்தே இருக்கும் திருமலையில்; நிரந்து ஏறி உயர ஏறி பரவி; பொழிவீர்காள்! பொழியும் மேகங்களே!; உலங்கு பெருங் கொசுக்கள்; உண்ட புசித்த; விளங்கனி போல் விளாம்பழம்போல; உள்மெலிய நான் உள்மெலியும் படி; புகுந்து என்னுள்ளே புகுந்து; என்னை என்னுடைய; நலம் கொண்ட நலனைப் பறித்த; நாரணற்கு நாராயணனுக்கு; என் பிரிவு என்னும் என்; நடலை நோய் துன்பத்தை; செப்புமினே சொல்லுங்கள்

Detailed WBW explanation

O resplendent clouds, swollen with the cool waters, ascending the sacred slopes! O magnificent clouds, gracefully spreading across Thiruvēṅgadam, the eternal abode of Emperumāṇ, who graciously accepted the cosmos as alms from Mahābali! It is Nārāyaṇa who has siphoned away my feminine virtues, rendering me akin to a wood apple fruit, devoid of its essence by the relentless mosquito. Convey unto that Emperumāṇ the depths of my sorrowful affliction.