NAT 8.1

மேகங்காள்! என் வேங்கடவன் உங்களோடு வந்தனோ?

577 விண்ணீலமேலாப்பு விரித்தாற்போல்மேகங்காள்! *
தெண்ணீர்பாய்வேங்கடத்து என் திருமாலும்போந்தானே? *
கண்ணீர்கள்முலைக்குவட்டில் துளிசோரச்சோர்வேனை *
பெண்ணீர்மையீடழிக்கும் இது தமக்கோர்பெருமையே. (2)
577 ## viṇ nīla melāppu * virittāṟpol mekaṅkāl̤ ! *
tĕṇ nīr pāy veṅkaṭattu * ĕṉ tirumālum pontāṉe? **
kaṇṇīrkal̤ mulaikkuvaṭṭil * tul̤i corac corveṉai *
pĕṇ nīrmai īṭazhikkum * itu tamakku or pĕrumaiye? (1)

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Divya Desam

Simple Translation

577. O clouds, covering the sky like a blue blanket! Thirumāl, of Venkatam hill where clear water flows has not come to see me and the tears from my eyes trickle down on my breasts. I am tired and I am only a woman. Is it honorable that he should trouble me like this?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விண் ஆகாசம் முழுவதிலும்; நீல நீல நிறமான; மேலாப்பு விதானம்; விரித்தா விரித்தது; போல் போல் உள்ள; மேகங்காள்! மேகங்களே!; தெண் நீர் தெளிந்த நீர்; பாய் பாயுமிடமான; வேங்கடத்து திருவேங்கடமலையின்; என் திருமாலும் திருமாலாகிய பிரானும்; போந்தானே? உங்களுடன் சென்றுவிட்டானோ?; முலைக்குவட்டில் மார்பின் மீது; கண்ணீர்கள் கண்ணீர்; துளி சோர துளிகள் வீழ; சோர்வேனை வருந்துகிற என்; பெண்நீர்மை பெண்மையின்; ஈடழிக்கும் உயர்வை அழிக்கும்; இது தமக்கு இச்செயல் உமக்கு; ஓர் பெருமையே? பெருமையானதோ?

Detailed WBW explanation

O clouds, resembling a celestial canopy over the aśure expanse! Has my Swāmi, Thirumāl, who eternally resides in the sacred hill of Tiruvēṅkadam, where pristine streams meander, arrived in your company? My heart is steeped in sorrow, causing droplets of my tears to fall upon the edge of my bosom. Does this plight of mine serve to enhance His glory?