TVT 80

மாலை நேரம் கண்டு தலைவி இரங்கல்

2557 சீரரசாண்டு தன்செங்கோல் சிலநள் செலீஇக்கழிந்த *
பாரரசொத்துமறைந்தது நாயிறு * பாரளந்த
பேரரசே! எம்விசும்பரசே! எம்மைநீத்து வஞ்சித்த
ஓரரசே! அருளாய் * இருளாய்வந்துறுகின்றதே.
2557 cīr aracu āṇṭu * taṉ cĕṅkol cila nāl̤ * cĕlīik kazhinta
pār aracu ŏttu maṟaintatu nāyiṟu ** pār al̤anta
per arace ĕm vicumpu arace ĕmmai nīttu vañcitta *
or arace arul̤āy * irul̤āy vantu uṟukiṉṟate80

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2557. She says, “The sun sets like the kings who ruled the world with their scepters for a time and disappeared. You measured the world and you are the king of the sky. Now, the darkness grows and gives us pain. Do not leave us. Give us your grace. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சீர் அரசு ஆண்டு சிறப்பாக அரசாண்டு; தன் செங்கோல் தனது நீதி தவறாத ஆட்சியை; சில நாள் செலீஇக் கழிந்த சில காலம் செலுத்திப் போன; பார் அரசு ஒத்து பூமிலுள்ள அரசர்களுக்கு சமமாக; நாயிறு சூரியன்; மறைந்தது அஸ்தமித்தான்; இருளாய் வந்து இருளான அந்தகாரம் வந்து; உறுகின்றதே தொடர்கின்றது; பார் அளந்த பேர் அரசே! பூமியை அளந்த பெருமானே!; எம் விசும்பு அரசே! பரமபத நாதனே!; எம்மை நீத்து எங்களைப் பிரிந்து; வஞ்சித்த வஞ்சனை செய்த; ஓர் அரசே! ஒப்பற்ற அரசே!; அருளாய் எங்களுக்கு அருள் புரிய வேண்டும்
sīr very well; arasu kingdom; āṇdu governing; than his; sengŏl rule; sila nāl̤ some time; seleei conducting; kazhindha after spending; pār on the earth; arasĕ with the kings; oththu being equal [to them]; nāyiṛu sūriyan (sun); maṛaindhadhu set; irul̤āy vandhu darkness, with its true form, came; uṛuginṛadhu is contacting; pār earth; al̤andha one who seiśed; pĕr having a great quality; arasĕ oh lord!; em being in close proximity to us; visumbu for paramapadham (ṣrīvaikuṇtam); arasĕ oh one who is the lord!; emmai us; nīththu leaving; vanjiththu through deceit; ŏr being unique; arasĕ oh one who became the king!; arul̤āy show your mercy