TVT 78

பிரிவாற்றாத தலைவி, தலைவனது ஆற்றலைக் கருதி, நெஞ்சழிந்து இரங்கல்

2555 நலியும்நரகனை வீட்டிற்றும் * வாணன் திண்தோள்துணித்த
வலியும் பெருமையும்யான் சொல்லும் நீர்த்தல்ல * மைவரைபோல்
பொலியுமுருவிற்பிரானார்புனை பூந்துழாய் மலர்க்கே
மெலியும்மடநெஞ்சினார் * தந்துபோயினவேதனையே.
2555 naliyum narakaṉai vīṭṭiṟṟum * vāṇaṉ tiṇ tol tuṇitta *
valiyum pĕrumaiyum * yām cŏllum nīrttu alla ** mai varai pol
pŏliyum uruviṉ pirāṉār puṉai pūn tuzhāy malarkke *
mĕliyum maṭa nĕñciṉār * tantu poyiṉa vetaṉaiye78

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2555. She says, “I cannot describe the strength and ability of the dark mountain-like lord who fought Vānāsuran and cut off his thousand strong arms. My innocent heart went to fetch his beautiful thulasi garland and has not returned— I am left only with the pain of my love. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நலியும் உலகத்தரைத் துன்புறுத்தும்; நரகனை நரகாசுரனை; வீட்டிற்றும் கொன்றதும்; வாணன் பாணாஸுரனது; திண் தோள் வலிய தோள்களை; துணித்த துணித்தவனின்; வலியும் வலிமையையும்; பெருமையும் பெருமையையும்; யாம் சொல்லும் நான் சொல்லத்தக்கவைகளாக; நீர்த்து அல்ல எளிமையானவைகள் அல்ல; மை வரை போல் அஞ்சன மலைபோல்; பொலியும் உருவில் அழகிய உருவமுடைய; பிரானார் புனை பெருமான் அணிந்துள்ள; பூந்துழாய் மலர்க்கே துளசி மாலையை விரும்பி; மெலியும் அது கிடைக்காமல் வருந்தும்; மட நெஞ்சினார் பேதை நெஞ்சு எனக்கு; தந்து போயின கொடுத்த; வேதனையே துன்பங்கள் இவை
naliyum troubling; naraganai the demon narakāsuran; vīttiṝum destroying; vāṇan the demon bāṇāsuran’s; thiṇ strong; thŏl̤ shoulders; thuṇiththa severed; valiyum strength; perumaiyum eminence (which followed it); yān sollum to be informed by me; nīrththalla do not have that nature; maivarai pŏl like a black mountain; poliyum shining (beauty); uruvil having divine form; pirānār krishṇan, the lord; punai donning; being beautiful; thuzhāy malarkkĕ for the divine thul̤asi flower; meliyum withering; madam being stubborn; nenjinār mind; thandhu pŏna given; vĕdhanai (this) agony