TVT 75

தலைவன் தலைவியை வியந்து பதி வினாதல்

2552 உலாகின்றகெண்டை யொளியம்பு * எம்மாவியையூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலைவாள் முகத்தீர்! * குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப்புணரியம்பள்ளியம்மான் அடியார்
நிலாகின்றவைகுந்தமோ? * வையமோ?நும்நிலையிடமே.
2552 ulākiṉṟa kĕṇṭai ŏl̤i ampu * ĕm āviyai ūṭuruvak
kulākiṉṟa vĕñcilai vāl̤ mukattīr ** kuṉi caṅku iṭaṟip
pulākiṉṟa velaip puṇari am pal̤l̤i ammāṉ * aṭiyār
nilākiṉṟa vaikuntamo * vaiyamo num nilaiyiṭame?75

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

2552. He says, “You have a shining face and your eyes that are like kendai fish spear through my heart. Our lord rests on Adisesha on the ocean where conches roam and the smell of fish spreads. Do you live in Vaikuntam where he lives, worshiped by the gods in the sky?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உலாகின்ற உலாவும்; கெண்டை கெண்டை மீன் வடிவமான; ஒளி ஒளியுள்ள கண்களாகிய; அம்பு அம்பானது; எம் ஆவியை எமது உயிரை; ஊடு உருவ ஊடுருவித் துளைக்கும்படியாக; குலாகின்ற வளைந்த; வெஞ் சிலை கொடிய புருவமான வில்லையுடைய; வாள் காந்தியுடன் கூடின; முகத்தீர் முகத்தையுடையவர்களே!; நும் நிலையிடமே உங்கள் இருப்பிடம்; குனி சங்கு வளைந்த வலம்புரிசங்குகளை; இடறி கரையில் ஒதுக்கி; புலாகின்ற இந்திரியங்களுக்கு விஷயமாகும்; வேலைப் புணரியம் அலைகளையுடைய கடலை; பள்ளி அழகிய படுக்கையையுடைய; அம்மான் பெருமானின்; அடியார் நிலாகின்ற நித்யஸூரிகள் இருக்கும்; வைகுந்தமோ? வைகுந்தமோ?; வையமோ? இந்த நிலவுலகமோ?
ulāginṛa roaming; keṇdai innocent, like fish; ol̤i having a radiance; ambu eyes which are like arrows; em āviyai my prāṇan (life); ūduruva crumbling it by piercing; kulāginṛa bent; vem cruel; silai having eye brows which are like bow; vāl̤ having a radiance; mugaththīr oh those who have faces!; num for you; nilai dwelling; idam place; kuni being bent (to the right side); sangu conches; idaṛi pushing (to the shore); pulāginṛa being a matter for sensory perceptions; vĕlai having waves; puṇari ocean; am beautiful; pal̤l̤i having as mattress; ammān lord’s; adiyār nithyasūris, his devotees; nilāginṛa place of dwelling; vaikundhamŏ is it ṣrīvaikuṇtam?; vaiyamŏ or, is it leelāvibhūthi (materialistic realm)?