TVT 63

தலைவனை இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிதல்

2540 வண்ணஞ்சிவந்துள வானாடமரும்குளிர்விழிய *
தண்மென்கமலத்தடம்போல் பொலிந்தன * தாமிவையோ
கண்ணன் திருமால்திருமுகந்தன்னொடும்காதல் செய்தேற்கு
எண்ணம்புகுந்து * அடியேனொடுஇக்காலம்இருக்கின்றதே.
2540 vaṇṇam civantul̤a * vāṉ nāṭu amarum kul̤ir vizhiya *
taṇ mĕṉ kamalat taṭam pol pŏlintaṉa ** tām ivaiyo
kaṇṇaṉ tirumāl tirumukam taṉṉŏṭum kātal cĕyteṟku *
ĕṇṇam pukuntu * aṭiyeṉŏṭu ik kālam irukkiṉṟate 63

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2540. She says, “He has a wonderful color and his cool beautiful eyes shine like lotuses blooming in the ponds in the sky. I love the divine presence of Kannan, Thirumāl— my heart thinks of him constantly without stopping. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்ணம் சிவந்துள சிவந்த நிறமுடையவனும்; வான் நாடு அமரும் பரமபதம் ஆனந்த மடையும் படி; குளிர் விழிய குளிர்ந்த பார்வையையுடைவனும்; தண் மென் கமல குளிர்ந்த மென்மையான தாமரை; தடம் போல் பொலிந்தன தடாகம் போல விளங்கும்; தாம் இவையோ இக்கண்கள்; கண்ணன் திருமால் கண்ணன் எம்பெருமானின்; திருமுகம் தன்னொடும் திருமுகமண்டலத்திலே; காதல் செய்தேற்கு ஆசையுடையவளான என்னுடைய; எண்ணம் புகுந்து மனதிலே புகுந்து; அடியேனொடு இக் காலம் இப்பொழுதும் என்னுடனேயே; இருக்கின்றவே இருக்கின்றன
vaṇṇam due to colour; sivandhul̤a becoming red; vān nādu nithyasūris who are in paramākāṣam (ṣrīvaikuṇtam); amarum to sustain; kul̤ir refreshing; vizhiya having glance; thaṇ being cool; mel being soft; kamalam lotus flowers which have blossomed; thadam pŏla like a pond; polindhana being splendorous; ivaidham these divine eyes; thirumāl̤ being ṣrīya:pathi (consort of ṣrī mahālakshmi); kaṇṇan purushŏththaman (best among all chĕthanas), who is obedient to his followers; thirumugam thannŏdu with the divine face; kādhal seydhĕṛku one who is desirous, my; eṇṇam with that intention; pugundhu entered [on their own]; adiyĕnodu with me, the servitor; ikkālam during the present time; irukkinṛavĕ are present