TVT 62

தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்கு உரைத்தல்

2539 இறையோ இரக்கினும் ஈங்கோர்பெண்பால் * எனவும்இரங்காது *
அறையோ! எனநின்றதிரும்கருங்கடல் * ஈங்கிவள்தன்
நிறையோவினியுன்திருவருளாலன்றிக் காப்பரிதால்
முறையோ? * அரவணைமேற்பள்ளிகொண்டமுகில் வண்ணனே.
2539 iṟaiyo irakkiṉum * īṅku or pĕṇpāl * ĕṉavum iraṅkātu
aṟaiyo ĕṉa * niṉṟu atirum karuṅkaṭal ** īṅku ival̤ taṉ
niṟaiyo iṉi uṉ tiru arul̤āl aṉṟi * kāppu aritāl
muṟaiyo * aravu aṇaimel pal̤l̤i kŏṇṭa mukil vaṇṇaṉe?62

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2539. Her friend says, “You have the color of a cloud and you rest on a snake bed on the ocean. Even if she worships the ocean and asks it to be calm, it just roars out, ‘aṟaiyoo!’ Her chastity cannot be saved without your divine grace. Is this right, O lord?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இரக்கினும் எவ்வளவு வேண்டினாலும்; ஓர் பெண்பால் இவள் ஒரு பெண்; எனவும் என்று கருதியும்; ஈங்கு இறையோ இவளிடத்தில் சிறிதும்; இரங்காத இரக்கம் கொள்ளாமல்; கருங்கடல் கருங்கடலானது; அறையோ என அறை கூவுகிறதோ என்பதுபோல்; நின்று அதிரும் அதிரும்படி கோஷம் எழுப்புகிறது; அரவு அணைமேல் ஆதிசேஷன் மேல்; பள்ளிகொண்ட சயனித்திருக்கும்; முகில் மேகம் போன்ற; வண்ணனே நிறமுடையவனே!; ஈங்கு இவள் தன் இவ்விடத்தில் இவளுடைய; நிறையோ நிறை குணத்தையோ; இனி உன் இனி உன்; திருவருளால் திருவருள் அல்லாது வேறு எதனாலும்; காப்பு அரிதால் பாது காக்க முடியாது அதனால்; முறையோ இவளை நீ அலட்சியம் செய்வது முறையோ?
karum kadal ocean which has a dark complexion; irakkinum even if beseeched; ŏr without any support; peṇpāl enavum even if the person happens to be a lady; īngu in her matters; iṛai even a little bit; irangādhu is not taking pity; aṛaiyŏ ena like those who make a huge noise; ninṛu remaining firmly; adhirum it is making a noise; ŏ ŏh, how cruel!; aravaṇai mĕl on top of the mattress, ādhiṣĕshan; pal̤l̤ikoṇda one who has reclined; mugil vaṇṇanĕ ŏh lord, who has the complexion of cloud!; īngu at this place; ival̤ than her; niṛaiyŏ modesty; ini henceforth; un thiruvarul̤āl anṛi other than by your mercy (with any other entity); kāppu aridhu difficult to protect; muṛaiyŏ (is this) apt?