TVT 55

தலைவியின் நலத்தைத் தலைவன் பாராட்டுதல்

2532 வண்டுகளோ! வம்மின் * நீர்ப்பூநிலப்பூமரத்திலொண்பூ
உண்டுகளித்துழல்வீர்க்கு ஒன்றுரைக்கியம் * ஏனமொன்றாய்
மண்துகளாடிவைகுந்தமன்னாள்குழல்வாய்விரைபோல்
விண்டுகள்வாரும் * மலருளவோநும்வியலிடத்தே?
2532 vaṇṭukal̤o vammiṉ * nīrp pū nilap pū marattil ŏṇ pū *
uṇṭu kal̤ittu uzhalvīrkku ŏṉṟu uraikkiyam * eṉam ŏṉṟāy **
maṇ tukal̤ āṭi vaikuntam aṉṉāl̤ kuzhalvāy virai pol *
viṇṭu kal̤ vārum * malar ul̤avo num viyaliṭatte-55

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2532. He says, “O bees! Come. You drink honey from the beautiful flowers that bloom on the water, on the earth and in the trees, and you feel happy and fly about. I want to tell you something. She is like the Vaikundam of him who took the form of a boar. You drink honey from the fragrant flowers on her hair. Have you ever seen such flowers anywhere else?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்டுகளோ! வண்டுகளே!; நீர்ப்பூ நிலப்பூ நீர்ப்பூவிலும் நிலப்பூவிலும்; மரத்தில் ஒண் பூ மரத்திலிருக்கும் அழகிய பூவிலும்; உண்டு களித்து தேனைப் பருகி களித்து; உழல்வீர்க்கு ஸஞ்சரிக்கும் உங்களுக்கு; ஒன்று உரைக்கியம் ஒரு வார்த்தை சொல்லுகிறேன்; வம்மின் வாருங்கள்; ஏனம் ஒன்றாய் ஒப்பற்ற ஒரு வராஹமாய்; மண் துகள் பூமியின் தூசியை; ஆடி அளைந்த எம்பெருமானின்; வைகுந்தம் பரமபதம் போன்றது; அன்னாள் இப்பராங்குச நாயகியினுடைய; குழல்வாய் கூந்தலில் உண்டான; விரைபோல் இயற்கையான மணம் இதற்கொப்பான; விண்டு மலர்ந்து மணம் வீசும்; கள் வாரும் தேனைப் பிரவகிக்கும்; மலர் மலர்களை; நும் ஸஞ்சரிக்கும்; வியலிடத்தே ஆச்சர்யமான பிரதேசத்தில்; உளவோ? கண்டதுண்டோ?
vaṇdugal̤ŏ ŏh beetles!; nīrppū among the flowers in water; nilappū among the flowers on land; maraththil on trees; oṇ beautiful; pū­ flowers; uṇdu drinking (honey); kal̤iththu becoming happy; uzhalvīrkku you, who are roaming; onṛu a word; uraikkiyam ī will say; vammin please come; oru unique; ĕnamāy as a varāham (wild boar); maṇ earth’s; thugal̤ dust; ādi one who took it throughout his divine form; vaigundhamannāl̤ on this nāyaki who is like paramapadham (being very much enjoyable), her; kuzhal vāy on her locks; virai pŏl being very fragrant; viṇdu spread well; kal̤ honey; vārum flowing copiously; malar flower; num your; viyal amaśing; idaththu places; ul̤adhŏ is it there?