TVT 50

மீண்டு வரும் தலைவன் தேர்ப்பாகனொடு கூறல்

2527 ஒண்ணுதல் மாமையொளிபயவாமை * விரைந்துநந்தேர்
நண்ணுதல்வேண்டும் வலவ! கடாகின்று * தேன்நவின்ற
விண்முதல்நாயகன்நீள்முடிவெண்முத்தவாசிகைத்தாய்
மண்முதல்சேர்வுற்று * அருவிசெய்யாநிற்கும்மாமலைக்கே.
2527 ŏl̤ nutal māmai ŏl̤i payavāmai viraintu nam ter *
naṇṇutal veṇṭum valava kaṭākiṉṟu ** teṉ naviṉṟa
viṇ mutal nāyakaṉ nīl̤ muṭi vĕṇ mutta vācikaittāy *
maṇ mutal cervuṟṟu * aruvicĕyyāniṟkum mā malaikke50

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 10-9

Divya Desam

Simple Translation

2527. He says, “O charioteer, drive swiftly. Don’t go slow. I must go and see my beloved with shining forehead before her pallor increases. We should go to the wide Thiruvenkatam hills of the god of gods in the sky where a waterfall shines like the pearl garland. and falls to the ground.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வலவ! ஓ சாரதியே!; ஒண் அழகிய; நுதல் நெற்றியையுடைய நாயகியின்; மாமை ஒளி நிறத்தின் காந்தியில்; பயவாமை பசலை படர்வதற்கு முன்; தேன் நவின்ற வண்டுகள் பாடும்; விண் முதல் நாயகன் பரமபத நாதன் தன்; நீள் முடி நீண்ட முடியில் தரித்துள்ள; வெண் முத்த வெண்முத்தின் அழகை; வாசிகைத்தாய் ஒத்த அழகுடைய; அருவி செய்யா நிற்கும் அருவி பிரவகிக்கும்; மண் முதல் சேர்வுற்று பூமியை சேரும்படி; மா மலைக்கே பெரிய மலைக்கு; நம் தேர் விரைந்து நம் தேரை விரைந்து; கடாகின்று நடத்திக்கொண்டு; நண்ணுதல் வேண்டும் செல்லவேண்டும்
valava ŏh charioteer, who is strong!; oṇ beautiful; nudhal nāyaki who has a forehead, her; māmai complexion’s; ol̤i radiance; payavāmai before it gets discoloured; thĕn like honey; navinṛa referred to as; viṇ mudhal for vibhūthis such as paramapadham; nāyakan one who is the lord, his; nīl̤ long; mudi on top of the crown; veṇ white; muththam pearls’; vāsigaiththāy arrangement; maṇ mudhal earth which is primary (for him); sĕrvuṝu to reach; aruvi having rivers; seyyā niṛkum flowing in abundance; huge; malaikku for the thirumalai hill; viraindhu quickly; nam thĕr our chariot; kadāginṛu conducting; naṇṇudhal vĕṇdum we should reach