TVT 4

தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு இரங்கல்

2481 தனிநெஞ்சம் முன்னவர்புள்ளேகவர்ந்தது * தண்ணந் துழாய்க்கு
இனிநெஞ்சம் இங்குக்கவர்வது யாமிலம் * நீநடுவே
முனிவஞ்சப்பேய்ச்சி முலைசுவைத்தான்முடிசூடுதுழாய்ப்
பனிநஞ்சமாருதமே! * எம்மதாவிபனிப்பியல்வே?
2481 taṉi nĕñcam muṉ avar * pul̤l̤e kavarntatu * taṇ am tuzhāykku
iṉi nĕñcam iṅkuk kavarvatu yām ilam ** nī naṭuve
muṉi vañcap peycci mulai cuvaittāṉ muṭi cūṭu tuzhāyp *
paṉi nañca mārutame * ĕmmatu āvi paṉippu iyalve?4

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2481. She says, “My lonely heart was attracted to his bird Garudā and went behind it. I have nothing to give to him who wears cool thulasi garlands. O cool poisonous wind! Is it right for you to blow and make me shiver for the love I have for him who drank milk from the breast of the devil Putanā?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தனி நெஞ்சம் தனியாக நிற்கும் என் மனதை; முன் அவர் புள்ளே முன்பு கருடனே; கவர்ந்தது கவர்ந்து கொண்டான்; தண் அம் குளிர்ந்ததும் அழகியதுமான; துழாய்க்கு துளசியை பறித்துக் கொள்வதற்கு; இனி யாம் இங்கு இனி இங்கு எனக்கு; நெஞ்சம் இலம் வேறு நெஞ்சம் இல்லை; முனி கோபத்தையுடைய; வஞ்சப் பேய்ச்சி பூதனையின்; முலை விஷப் பாலை; சுவைத்தான் சுவைத்த கண்ணன்; முடி சூடு முடியில் சூடியிருந்த; துழாய் துளசியின்; பனி நஞ்ச குளிர்ந்த விஷம் போன்ற; மாருதமே காற்றே; நீ நடுவே நீ நடுவில் வந்து எங்களுடைய; எம்மது ஆவி பிராணனை; கவர்வது நடுங்கச்செய்வது; பனிப்பு இயல்வே இயல்போ தகுந்ததோ
thani distinguished; nenjam heart; mun already; avar that sarvĕṣvaran’s; pul̤l̤ĕ the bird garuda himself (emperumān’s vehicle); kavarndhadhu had stolen; ini further; yām we; ingu in this place; thaṇ being cool; am beautiful; thuzhāykku for the divine thul̤asi; kavarvadhu for stealing; nenjam heart; ilam do not have; muni having anger; vanjam having deceit; pĕychchi the demon pūthanā; mulai bosom; suvaiththān krishṇa who drank; mudi in his crown; sūdum proffered; thuzhāy divine thul̤asi; pani having coolness; nanjam being poisonous; mārudhamĕ ŏh wind!; you; naduvĕ amidst these; emmadhu our; āvi prāṇan (life); panippu shivering; iyalvĕ is it its nature? (is it correct?)