TVT 35

மாலைப் பொழுதுக்கு ஆற்றாத தலைவி வாடை கண்டு இரங்கல்

2512 பால்வாய்ப்பிறைப்பிள்ளை ஒக்கலைக்கொண்டு * பகலிழந்த
மேல்பால்திசைப்பெண் புலம்புறுமாலை * உலகளந்த
மால்பால்துழாய்க்குமனமுடையார்க்குநல்கிற்றை யெல்லாம்
சோல்வான்புகுந்து * இதுவோர்பனிவாடை துழாகின்றதே.
2512 pāl vāyp piṟaip pil̤l̤ai * ŏkkalaik kŏṇṭu * pakal izhanta
melpāl ticaippĕṇ pulampuṟu mālai ** ulaku al̤anta
mālpāl tuzhāykku maṉam uṭaiyārkku nalkiṟṟai ĕllām *
colvāṉ pukuntu * itu or paṉi vāṭai tuzhākiṉṟate35

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2512. She says, “The evening, the woman of the west, feels alone after the sun, her husband, has left as she holds in her lap the moon, her son, whose mouth is filled with milk. The cool wind blows strong as if it wants to take away all the grace that Thirumāl who measured the world gives to those who long for his thulasi garland. "

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பால் வாய் பால் மணம் மாறாத; பிறை பிறைச் சந்திரனாகிய; பிள்ளை பிள்ளையை; ஒக்கலை இடுப்பிலே; கொண்டு எடுத்துக்கொண்டு; பகல் ஸூர்யனாகிய; இழந்த கணவனையிழந்த; மேல்பால் மேற்கு; திசைப்பெண் திசையாகிய பெண்; புலம்புறு வருந்தி அழும்; மாலை மாலைப் பொழுது; உலகு அளந்த மால்பால் உலகளந்த பெருமானின்; துழாய்க்கு துளசிமாலையில் ஈடுபட்ட; மனம் உடையார்க்கு மனமுடையவளுக்கு; நல்கிற்றை எல்லாம் கொடுத்தவற்றை எல்லாம்; சோல்வான் அபகரிக்கும் பொருட்டு; புகுந்து இது ஓர் புகுந்த இந்த ஒரு; பனி வாடை குளிர்ந்த வாடைக் காற்றானது; துழாகின்றதே! என்மேல் தடவுகின்றது அந்தோ!
pālvāy having milk in its mouth; piṛai crescent of moon; pil̤l̤ai child; okkalai on the hip; koṇdu carrying; pagal day time, the master; izhandha one who lost; mĕl pāl being on the western side; dhisai as the direction; peṇ who could be considered as a lady; pulambuṛum crying; mālai evening time; ulagu worlds; al̤andha one who occupied; māl pāl with sarvĕṣvaran; thuzhāykku fond of thul̤asi; manamudaiyārkku those who have their minds [on such thul̤asi]; nalgiṝaiyellām all those (including existence) which were given; sŏlvān to steal; pugundhu entering; idhu this; ŏr unique; pani cold; vādai northerly wind; thuzhāginṛadhu gently hugging