TVT 34

தலைவி இழைத்த கூடல் அழிவிற்கு இரங்கிய பாங்கி தலைவற்குரைத்தல்

2511 சிதைக்கின்றதாழி என்று ஆழியைச்சீறி * தன் சீறடியால்
உதைக்கின்றநாயகந்தன்னொடுமாலே! * உனதுதண்தார்
ததைக்கின்றதண்ணந்துழாயணிவானதுவேமனமாய்ப்
பதைக்கின்றமாதின்திறத்து * அறியேஞ்செயற் பாலதுவே.
2511 citaikkiṉṟatu āzhi * ĕṉṟu āzhiyaic cīṟi * taṉ cīṟaṭiyāl-
utaikkiṉṟa nāyakam * taṉṉŏṭu māle ** uṉatutaṇ tār-
tataikkiṉṟa taṇ am tuzhāy aṇivāṉ atuve maṉamāyp
pataikkiṉṟa mātiṉtiṟattu * aṟiyeṉ cĕyaṟpālatuve34

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2511. Her friend says, “You are our Thirumāl. Upset, she kicks and erases the kudal she drew on the sand because it will not come together. She loves you and wants your thulasi garland. I don’t know how to help her and keep her from worrying so. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாலே! திருமாலே!; ஆழி கடலானது கூடலை; சிதைக்கின்றது என்று கலைக்கின்றது என்று; சீறி தன் கோபித்து தன்; சீறடியால் அழகிய பாதத்தினால்; ஆழியை உதைக்கின்ற கடலை உதைக்கும்; நாயகம் நாயகனைப் பிரிந்த; தன்னொடு நாயகி செருக்குடன் கூடினவளாய்; தண் தார் குளிர்ந்த பூவினால்; ததைக்கின்ற பூர்ணமான; தண் அம் குளிர்ந்த அழகிய; உனது துழாய் உன் துளசிமாலையை; அணிவான் அதுவே அணிவதிலேயே; மனமாய் கருத்தாய்; பதைக்கின்ற வருந்துகிற; மாதின்திறத்து இப்பெண்ணின் விஷயத்தில்; செயற்பாலதுவே நீர் செய்யதக்கதை; அறியேன் நான் அறியேன்
mālĕ ŏh swāmy (lord)!; āzhi ocean; āzhiyai kūdal (drawing of circles on sand); sidhaikkinṛadhu destroying; enṛu saying so; sīṛi becoming angry; than her; sīr beautiful; adiyāl with foot; āzhiyai ocean; udahikkinṛa kicking; nāyagam thannodu with pride; thaṇ cool; thār with flower; thadhaikkinṛa being complete; thaṇ cool; am beautiful; unadhu your; thuzhāy garland of divine thul̤asi; aṇivān to don; adhuvĕ in that; manamāy keeping her mind; padhaikkinṛa having urge; mādhin thiṛaththu in the matter of the girl; seyaṛpāladhu­ what you intend doing; aṛiyĕn ī do not know