TVT 33

தலைவியின் ஆற்றாமை கண்ட தோழி தலைவனை வெறுத்துக் கூறல்

2510 அருளார்திருச்சக்கரத்தால் அகல்விசும்பும்நிலனும் *
இருளார்வினைகெடச் செங்கோல்நடாவுதிர் * ஈங்கோர் பெண்பால்
பொருளோவெனுமிகழ்வோ? இவற்றின் புறத்தாளென்றெண்ணோ
தெருளோம்அரவணையீர்! * இவள்மாமைசிதைக்கின்றதே.
2510 அருள் ஆர் திருச் சக்கரத்தால் * அகல் விசும்பும் நிலனும் *
இருள் ஆர் வினை கெட செங்கோல் நடாவுதிர் ** ஈங்கு ஓர் பெண்பால்
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ? *
தெருளோம் அரவணையீர் * இவள் மாமை சிதைக்கின்றதே33
2510 arul̤ ār tiruc cakkarattāl * akal vicumpum nilaṉum *
irul̤ ār viṉai kĕṭa cĕṅkol naṭāvutir ** īṅku or pĕṇpāl
pŏrul̤o ĕṉum ikazhvo? ivaṟṟiṉ puṟattāl̤ ĕṉṟu ĕṇṇo? *
tĕrul̤om aravaṇaiyīr * ival̤ māmai citaikkiṉṟate33

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2510. Her friend says, “You rest on Adishesa on the ocean and rule this world with a scepter and your divine discus and you take away the bad karmā of the world and the wide sky and give your grace to all. Are you ignoring her, thinking she is just a woman? Do you think she is a stranger? We cannot understand what you are thinking, but we see her growing pale and her beauty being spoiled. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
அருள் ஆர் கருணை நிறைந்த; திருச் சக்கரத்தால் சக்கரத்தைக் கொண்டு; அகல் விசும்பும் பரந்த ஆகாசத்தையும்; நிலனும் பூமியையும்; இருள் ஆர் அஞ்ஞான அந்தகாரத்தால்; வினை உண்டாகும் பாபங்கள்; கெட அழியும்படி; செங்கோல் நடாவுதிர் ஆட்சி புரிகிறீர்; அரவணையீர்! ஆதிசேஷ படுக்கையிலிருப்பவனே!; இவள் மாமை இவள் நிறம்; சிதைக்கின்றதே அழிகின்றதே; ஈங்கு ஓர் இந்த மண் உலகில் ஒரு; பெண்பால் பெண்ணை; பொருளோ எனும் காப்பது; இகழ்வோ? என்பது இகழ்வோ?; இவற்றின் இவள் விண் மண் உலகங்களுக்கு; புறத்தாள் என்று அப்பாற்பட்டவள் என்கிற; எண்ணோ? எண்ணமோ?; தெருளோம் அறியாமல் கலங்குகிறோம்
arul̤ mercy; ār to the brim; thiruchchakaraththāl with the divine chakkaram (chakram disc); agal expansive; visumbum sky; nilanum and the earth; irul̤ār full of darkness (made of ignorance); vinai sins; keda to be annihilated; sengŏl order; nadāvudhir you are employing; aravu ādhiṣĕshan; aṇaiyīr ŏh the lord who has him as your mattress!; ival̤ māmai her complexion; sidhaikkinṛadhu is being destroyed; īngu in this leelāvibhūthi (materialistic realm); ŏr one; peṇpāl matter relating to a girl; porul̤ŏ is it the end goal?; enum saying so; igazhvŏ is it contemptuousness?; ivaṝin all these entities to be protected; puṛaththāl̤ outside these; enṛu saying so; eṇṇŏ is it your divine opinion?; therul̤ŏm we do not know