TVT 32

போலி கண்டுரைத்தல்

2509 மேகங்களோ! உரையீர் * திருமால்திருமேனியொக்கும்
யோகங்கள் உங்களுக்கெவ்வாறுபெற்றீர்? * உயிரளிப்பான்
மாகங்களெல்லாந்திரிந்துநன்னீர்கள்சுமந்து நுந்தம்
ஆகங்கள்நோவ * வருந்தும்தவமாமருள்பெற்றதே.
2509 mekaṅkal̤o uraiyīr * tirumāl tirumeṉi ŏkkum *
yokaṅkal̤ uṅkal̤ukku ĕvvāṟu pĕṟṟīr? ** uyir al̤ippāṉ
mākaṅkal̤ ĕllām tirintu nal nīrkal̤ cumantu * num tam
ākaṅkal̤ nova * varuttum tavam ām arul̤pĕṟṟate?32

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2509. She says, “O clouds, tell me, how did you get the good fortune of having the color of the divine Thirumāl? Did you do tapas to receive the grace of him who gives life to all? Dark and filled with water, you give rain to the world and make it flourish. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மேகங்களோ! ஓ மேகங்களே!; திருமால் எம்பெருமானது; திருமேனி திருமேனியோடு; உங்களுக்கு உங்கள் திருமேனியும்; ஒக்கும் ஒத்திருக்கும்படியான; யோகங்கள் உபாயங்களை; எவ்வாறு பெற்றீர்? எவ்விதம் அடைந்தீர்கள்?; உரையீர் சொல்லுங்கள்; அருள் எம்பெருமானின் கிருபையை நீங்கள்; பெற்றதே அடைந்தது; உயிர் பிராணிகளை; அளிப்பான் ரக்ஷிப்பதற்காக; மாகங்கள் எல்லாம் ஆகாசமெல்லாம்; திரிந்து ஸஞ்சரித்து; நல் நீர்கள் நல்ல நீரை; சுமந்து நும் தம் சுமந்துகொண்டு உங்கள்; ஆகங்கள் நோவ சரீரம் நோவும்படி; வருத்தும் தவமாம் வருந்திச் செய்த தவமோ?
ŏ mĕgangal̤ ŏh clouds!; thirumāl the consort of ṣrī mahālakshmi; thirumĕni with his divine form; ungal̤ukku for you; okkum to attain equality; yŏgangal̤ the means; evvāṛu with which means; peṝīr did you attain?; uraiyīr inform; arul̤ peṝadhu getting (sarvĕṣvaran’s) mercy; uyir all living creatures; al̤ippān to protect; māgangal̤ ellām throughout the sky; thirindhu roaming; nal neergal̤ good water; sumandhu bearing them; num tham your; āgangal̤ forms; nŏva to be painful; varuththum troubling; thavamām would be due to penance