TVT 26

தலைவன் தனது நகரை காட்டுதல்

2503 ## நானிலம்வாய்க்கொண்டு நன்னீரறமென்றுகோது கொண்ட *
வேனிலஞ்செல்வன்சுவைத்துமிழ்பாலை * கடந்தபொன்னே!
கால்நிலந்தோய்ந்துவிண்ணோர்தொழும்கண்ணன் வெஃகாவுது அம்பூந்
தேனிளஞ்சோலையப்பாலது * எப்பாலைக்கும்சேமத்ததே.
2503 ## nāṉilam vāyk kŏṇṭu * nal nīr aṟa mĕṉṟu kotu kŏṇṭa *
veṉil alam cĕlvaṉ cuvaittu umizh pālai ** kaṭanta pŏṉṉe
kāl nilam toyntu viṇṇor tŏzhum kaṇṇaṉ vĕḵkāutu * am pūn
teṉ il̤añ colai appālatu * ĕppālaikkum cemattate26

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

2503. He says, “The sun travels through all lands and makes this desert so hot that no one can live here. You, precious as gold, have crossed into even this hot land with me. Let us go to the temple in Thiruvekka where the gods in the sky come to worship Kannan. The beautiful, blooming grove near the temple will take away our weariness and make us feel good in this desert land. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நானிலம் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களையும்; வாய்க் கொண்டு வாயிலிட்டுக்கொண்டு; நல் நீர் அறம் ஸாரமான நீர்ப்பசை அறும்படி மென்று; என்று கோது அஸாரமானவை; கொண்ட என்பதை அறிந்து; வேனில வெப்பத்தை தனக்கு; அம் செல்வன் செல்வமாக உடைய சூரியன்; சுவைத்து அவற்றைச் சுவைத்து; உமிழ் உமிழ்ந்த சக்கையாகிய; பாலை கடந்த பாலை நிலத்தை கடந்து வந்த; பொன்னே! பொன் போன்றவளே!; விண்ணோர் நித்யஸூரிகளும்; நிலம் தங்கள் கால்கள் நிலத்தில்; தோய்ந்து பதியும்படி; தொழும் வணங்கிய; கண்ணன் கண்ணனிருக்கும்; வெஃகாஉது திருவெஃகாவானது; அப்பாலது அருகிலுள்ளது; அம்பூ அழகிய பூவையும்; தேன் தேனையுமுடைய; இளம் இளமை மாறாத; சோலை சோலைகளோடு கூடினது; எப்பாலைக்கும் எல்லாத் துன்பங்களையும் போக்கி; சேமத்ததே கால் இன்பம் தரும்
ponnĕ oh one who looks like lustrous gold!; vĕnil having hot rays; am beautiful; selvan sūriyan (sūrya); nāl nilam earth, which is classified into four types [of lands]; vāykkoṇdu taking in his mouth well; nal the essence; nīr water; aṛa to be removed; menṛu chewing; kŏdhu residual matter; koṇda taking it (again), in the mouth; suvaiththu sucking on it fully; umizh spitting it out; pālai desert land; kadandha has been crossed; viṇṇŏr celestial entities; nilam on the earth; kāl thŏyndhu standing on their feet firmly; thozhum worshipping; kaṇṇan the noble place where kaṇṇan has mercifully taken residence; vehkā thiruvehkā (a noble place in present day kānchīpuram); udhu is nearby; appāladhu what is seen after that; am beautiful; having flowers; thĕn with honey dripping; nalam beautiful; sŏlai orchard; eppālaikkum in all states; sĕmaththadhu will be good