TVT 20

வெறி விலக்கு(வேலனது வெறியாட்டை விலக்குதல்)

2497 சின்மொழிநோயோ கழிபெருந்தெய்வம் * இந்நோயினதென்று
இன்மொழிகேட்கும் இளந்தெய்வமன்றிது * வேல! நில்நீ
என்மொழிகேண்மின்என்னம்மனைமீர்! உலகேழுமுண்டான்
சொல்மொழி * மாலயந்தண்ணந்துழாய் கொண்டு சூட்டுமினே.
2497 cilmŏzhi noyo * kazhi pĕrun tĕyvam * in noy iṉatu ĕṉṟu
il mŏzhi keṭkum * il̤an tĕyvam aṉṟu itu ** vela nil nī
ĕṉ mŏzhi kel̤miṉ ĕṉ ammaṉaimīr ulaku ezhum uṇṭāṉ *
cŏl mŏzhi mālai * am taṇṇam tuzhāykŏṇṭu cūṭṭumiṉe20

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2497. Her friend says, “O Velan! She is not sick because her words are few. Her sickness is not one that some young god has given— it is only because she has fallen in love with our lord. O Velan, stop your worship. O mothers, hear my words. Bring the cool thulasi garland from him who swallowed all the seven worlds and put it on her. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சில்மொழி சில பேச்சுக்களே பேசும்; நோயோ இவள் நோய்; கழிபெரும் மிகப் பெரிய; தெய்வம் எம்பெருமானால் வந்தது; இன் நோய் இந்த நோய்; இனது என்று இப்படிப்பட்ட தென்று; இல் மொழி கேட்கும் வரையறுத்துச் சொல்ல; இளந் தெய்வம் சிறிய தேவதையை; அன்று இது பற்றியது அல்ல; வேல! வெறியாட்டம் ஆடுபவனே!; நில் நீ நீ விலகி நிற்பாயாக; என் அம்மனைமீர்! எனது தாய்மார்களே!; என் மொழி என் வார்த்தையை; கேண்மின் கேளுங்கள் என்று தோழி கூறுகிறாள்; உலகு ஏழும் எல்லா உலகங்களையும்; உண்டான் பிரளய காலத்தில் உண்டவனின்; சொல் மொழி திருநாமங்களை சொல்லி; மாலை அம் தண்ணம் அழகிய குளிர்ந்த; துழாய் துளசி மாலையை; கொண்டு கொண்டு வந்து; சூட்டுமினே இவளுக்குச் சூட்டுங்கள்
chinmozhi she, who speaks (illegible) small words , her; nŏy illness; kazhi very much; perum huge; dheyvam happened due to such supreme entity; innŏy this illness; inadhu enṛu resulted due to lowly ṅods; inmozhi non-existent (false) words; kĕtkum feeling happy on hearing; il̤am dheyvam a lowly ṅod; idhu this illness; anṛu did not result; vĕla ŏh vĕla (subrahmaṇya)!; you; nil stand at a distance; en ammanaimīr ŏh my mothers!; en mozhi my words; kĕṇmin do listen to; ulagu ĕzhum the seven worlds; uṇdān one who ate; mozhi divine names; sol recite; am beautiful; thaṇ cool; thuzhāy strung with divine thul̤asi; mālai garland; koṇdu bring; sūttumin adorn