TVT 16

தலைவி இருள் வியந்து உரைத்தல்

2493 பலபலவூழிகளாயிடும் * அன்றியோர்நாழிகையைப்
பலபலகூறிட்டகூறாயிடும் * கண்ணன்விண்ணனையாய்!
பலபலநாளன்பர்கூடிலும்நீங்கிலும்யாம்மெலிதும்
பலபலசூழலுடைத்து * அம்ம! வாழிஇப்பாயிருளே.
2493 palapala ūzhikal̤ āyiṭum * aṉṟi or nāzhikaiyaip *
palapala kūṟiṭṭa kūṟu āyiṭum * kaṇṇaṉ viṇ aṉaiyāy! **
palapala nāl̤ aṉpar kūṭilum nīṅkilum yām mĕlitum *
palapala cūzhal uṭaittu * amma vāzhi ip pāy irul̤e16

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2493. He says, “You are as precious as the sky where Kannan stays. When I am away from you, it seems as if many eons pass, but the time I am with you seems very short. Whether you are with me or away from me, I become weak. This darkness gives me much pain. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண்ணன் விண் கண்ணனின் பரமபதம்; அனையாய்! போல் எனக்கு பிரியமான தோழியே!; அன்பர் அன்புடைய நாயகன்; பலபல பிரிந்த நிலையில் இரவுப் பொழுது; ஊழிகள் பல கல்பங்களாக நிற்கும் அவனுடன்; ஓர் நாழிகையை கூடியிருந்தால் ஒரு நாழிகையை; பலபல கூறு பலபல கூறுகளாக்கிய; கூறு ஆயிடும் கூறுகளில் ஒரு கூறாக நிற்கும்; அன்றி அன்றி; அன்பர் நீங்கிலும் நாயகன் க்ஷணகாலம் பிரிந்தாலும்; ஓர் நாழிகையை ஒரு நாழிகையை; பலபல கூறிட்ட கூறு பல கூறிட்ட கூறு; ஊழிகள் ஆயிடும் பல கல்பங்களாக நிற்கும்; யாம் பலபல காலம் வளர்வதால் நாம்; மெலிதும் துன்பப்படுகிறோம்; இப் பாய் இருளே! இந்தப் பரந்த இருட்பொழுது; சூழல் உடைத்து எந்த நிலையிலும் வருத்துகின்ற; அம்ம! வாழி இந்த இருள் வாழ்க அந்தோ!
kaṇṇan krishṇa’s; viṇṇaṇaiyāy one who is enjoyable like paramapadham; anbar the leading man who is affectionate; palapala nāl̤ many kalpams (kalpam is one day of brahmā, running to millions of years); kūdilum whether united; ŏr nāzhigaiyai one nāzhigai (24 minutes); palapala kūṛitta broken down many times over; kūṛāyidum will become infinitesimal; anṛi otherwise; nīngilum even (if the leading man) separates (for a moment); ŏr nāzhigaiyai one nāzhigai; palapala kūṛitta kūṛu an infinitesimal moment by breaking down the nāzhigai; palapala ūzhigal̤āyidum will become many kalpams; yām we; palapala long time; melidhum are suffering; amma ŏh mother!; pāy expansive; i irul̤ this darkness; palapala many types; sūzhal deceitful acts; udaiththu has; vāzhi let it live long; (this is termed as nindhāsthuthi abusing, as if being praising)