TVT 13

இருளுக்கும் வாடைக்கும் தலைவி இரங்கல்

2490 தனிவளர்செங்கோல்நடாவு * தழல்வாயரசவியப்
பனிவளர்செங்கோலிருள்வீற்றிருந்தது * பார்முழுதும்
துனிவளர்காதல்துழாயைத்துழாவுதண்வாடைதடிந்து
இனிவளைகாப்பவரார்? * எனையூழிகளீர்வனவே.
2490 taṉi val̤ar cĕṅkol naṭāvu * tazhal vāy aracu aviyap
paṉi val̤ar cĕṅkol irul̤ vīṟṟiruntu ** pār muzhutum
tuṉi val̤ar kātal tuzhāyait tuzhāvu taṇ vāṭai taṭintu
iṉi val̤ai kāppavar ār? * ĕṉai ūzhikal̤ īrvaṉave13

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2490. She says, “The sun, the king of the day, the ruler of the earth with his scepter, has set and the heat and the light have gone away. The king of cold and darkness has come to rule. The cool wind coming from the thulasi garland of my beloved makes my bangles grow loose. Who will protect me? The night grows like an eon. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தனி வளர் ஈடு இணையில்லாது வளர்கின்ற; செங்கோல் தனது ஒளிமயமான ஆட்சியை; நடாவு நடத்தும்; தழல் வாய் வெப்பமுடைய; அரசு அவிய ஸுர்யனாகிய அரசன் அழிய; பனி வளர் குளிர்ச்சியை வளர்க்கும்; செங்கோல் இருள் ஆட்சியையுடைய இருள்; பார் முழுதும் பூமி முழுதும்; வீற்றிருந்தது வீற்றிருந்தது; துனி வளர் துன்பத்தை அதிகப்படுத்துகிற; காதல் காதல் விஷயமான; துழாயை துளசியை; துழாவு தண் அளாவி வரும் குளிர்ந்த; வாடை வாடைக் காற்றை; தடிந்து இனி தண்டித்து பிரிவால் உடல் மெலிந்து; வளை கழலும் என் வளையல்களை; காப்பவர் ஆர்? காப்பவர் யாரேனும் உளரா?; எனை ஊழிகள் இந்த இரவானது ஊழிகாலம் போல்; ஈர்வனவே! நீள்கின்றதே!
thani unique; val̤ar growing; sengŏl having order; nadāvu conducting; thazhal for the heat; vāy being the origin; arasu sūriyan, the king; aviya to disappear (to set); pani cold; val̤ar growing; sengol̤ having order; irul̤ darkness; pār muzhudhum throughout the world; vīṝirundhadhu had pervaded; thuni sorrow; val̤ar one which enables to grow; kādhal being the matter for love; thuzhāyai divine thul̤asi; thuzhāvu mingling; thaṇ cool; vādai northerly breeśe; thadindhu splitting; ini hereafter; val̤ai bangles; kāppavar one who protects; ār who; enai me; ūzhigal̤ (these nights) like eons; īrvanavĕ are splitting