திருப்பள்ளியெழுச்சி தனியன்கள் / Thiruppaḷḷiezhuchi taṉiyaṉkal̤

மண்டங்குடி யென்பர் மாமரையோர் மன்னியசீர்
தொண்டரடிப் பொடி தொன்னகரம் * வண்டு
திணர்த்த வயல் தென்னரங்கத்தம்மானைப் * பள்ளி
யுணர்த்தும் பிரானுதித்தவூர்

maṇṭaṅkuṭi yĕṉpar māmaraiyor maṉṉiyacīr
tŏṇṭaraṭip pŏṭi tŏṉṉakaram * vaṇṭu
tiṇartta vayal tĕṉṉaraṅkattammāṉaip * pal̤l̤i
yuṇarttum pirāṉutittavūr
திருவரங்கப் பெருமாளறையர் / tiruvaraṅkap pĕrumāl̤aṟaiyar

Word by word meaning

வண்டு திணர்த்த வண்டுகள் நிறைந்த; வயல் வயல்களால் சூழ்ந்த; தென்னரங்கத்து அழகிய திருவரங்கத்தில்; பள்ளி உணர்த்தும் சயனித்திருக்கும்; அம்மானை ஸ்ரீரங்கநாதனை; பிரான் எம்பிரானை அனவரதமும் வணங்கும்; தொண்டரடிப்பொடி தொண்டரடிப்பொடி ஆழ்வார்; உதித்த ஊர் அவதரித்த ஊர்; மன்னிய சீர் சீர்மையுடைய; மண்டன் குடி மண்டன் குடி என்னும்; தொன்னகரம் என்பர் புராதனமான நகரமாகும் என்பர்; மாமறையோர் வேதம் அறிந்த பெரியோர்