தனியன் / Taniyan

திருமாலை தனியன்கள் / Thirumālai taṉiyaṉkal̤

மற்றொன்றும் வேண்டா மனமே! * மதிளரங்கர்
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ் * உற்ற
திருமாலைபாடும் சீர்த்தொண்டரடிப் பொடி யெம்
பெருமானை * எப்பொழுதும் பேசு

maṟṟŏṉṟum veṇṭā maṉame! * matil̤araṅkar
kaṟṟiṉam meytta kaḻaliṇaikkīḻ * uṟṟa
tirumālaipāṭum cīrttŏṇṭaraṭip pŏṭi yĕm
pĕrumāṉai * ĕppŏḻutum pecu
திருவரங்கப் பெருமாளறையர் / tiruvaraṅkap pĕrumāl̤aṟaiyar
TM-1
TM-2
TM-3

Word by word meaning

மனமே! மனமே!; மற்று ஒன்றும் வேறு ஒன்றையும்; வேண்டா நீ விரும்பவேண்டாம்; மதிளரங்கர் மதில் அரங்கத்து பெருமானின்; கற்றினம் கன்றுகளை; மேய்த்த மேய்த்த; கழலினைக்கீழ் திருவடிகளின் கீழ்; உற்ற பணிந்திருக்கும்; திருமாலை திருமாலை என்ற பிரபந்தத்தை; பாடும் பாடியருளிய; சீர்த் சிறப்புடைய; தொண்டரடிப்பொடி தொண்டரடிப்பொடி; எம்பெருமானை ஆழ்வாரை; எப்பொழுதும் சதா சர்வகாலமும்; பேசு நினைந்திரு