திருச்சந்தவிருத்த தனியன்கள் / Thiruchanda Virutham taṉiyaṉkal̤

தருச்சந்தப் பொழில் தழுவு தாரணியின் துயர்தீர *
திருச்சந்த விருத்தம் செய் திருமழிசைப் பரன்வருமூர் *
கருச்சந்தும் காரகிலும் கமழ் கோங்கும் மணநாறும் *
திருச்சந்தத்துடன் மருவு திருமழிசை வளம்பதியே

taruccanda ppozil tazuvu⋆ tāraṇiyin tuyartīra⋆
tiruccanda viruttam śey ⋆ tirumaziśai pparanvarumūr⋆
karuccandum kāragilum⋆ kamaz kōṅgum maṇanāṟum ⋆
tiruccanda ttuḍanmaruvu ⋆ tirumaziśai vaḻam padiyē
திருக்கச்சி நம்பிகள் / tirukkacci nampikal̤

Word by word meaning

தரு கற்பக மரம்; சந்தம் சந்தன மரம் ஆகியவற்றால் நிறைந்த; பொழில் தழுவு சோலைகளால் சூழ்ந்த; தாரணியின் உலகிலுள்ளவர்களுடைய; துயர்தீர துயரம் தீர; திருச்சந்த விருத்தம் திருச்சந்த விருத்தம் என்னும்; செய் திவ்யபிரபந்தத்தை அருளிச்செய்த; திருமழிசைப் பரன் திருமழிசைப் பிரான்; வருமூர் அவதரித்த ஊர் எது என்றால்; கருச்சந்தும் சந்தன மரங்களும்; கார் அகிலும் கருத்த அகிற்கட்டைகளும்; கமழ் கோங்கும் மணம் கமழும் கோங்குமரங்களும்; மணம் நாறும் பரிமளம் வீசப்பெற்ற; திருச்சந்தத்துடன் திருமகள் ஆர்வத்தோடு; மருவு பொருந்தி வாழும்; திருமழிசை திருமழிசை என்னும்; வளம் பதியே செல்வம் மிக்க திருப்பதியேயாகும்