தனியன் / Taniyan
திருச்சந்தவிருத்த தனியன்கள் / Thiruchanda Virutham taṉiyaṉkal̤
தருச்சந்தப் பொழில் தழுவு தாரணியின் துயர்தீர *
திருச்சந்த விருத்தம் செய் திருமழிசைப் பரன்வருமூர் *
கருச்சந்தும் காரகிலும் கமழ் கோங்கும் மணநாறும் *
திருச்சந்தத்துடன் மருவு திருமழிசை வளம்பதியே
taruccanda ppozil tazuvu⋆ tāraṇiyin tuyartīra⋆
tiruccanda viruttam śey ⋆ tirumaziśai pparanvarumūr⋆
karuccandum kāragilum⋆ kamaz kōṅgum maṇanāṟum ⋆
tiruccanda ttuḍanmaruvu ⋆ tirumaziśai vaḻam padiyē
திருக்கச்சி நம்பிகள் / tirukkacci nampikal̤
திருச்சந்தவிருத்த தனியன்கள் / Thiruchanda Virutham taṉiyaṉkal̤
உலகும் மழிசையும் உள்ளுணர்ந்து * தம்மில்
புலவர் புகழ்க்கோலால் தூக்க * - உலகுதன்னை
வைத்தெடுத்த பக்கத்தும் * மாநீர் மழிசையே
வைத் தெடுத்த பக்கம் வலிது
ulagum maziśaiyum uḻḻuṇarndu⋆ tammil
pulavar pugazkkōlāl tūkka ⋆ ulagu tannai
vaitteḍutta pakkattum⋆ mānīr maziśaiyē⋆
vaitteḍutta pakkam validu
திருக்கச்சி நம்பிகள் / tirukkacci nampikal̤